ஒரே நாளில் இரண்டு ரயில்கள் தடம்புரள்வு

ஒரே நாளில் இரண்டு ரயில்கள் தடம்புரள்வு

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

தெமோதர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பதுளை – கண்டி ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று தடம் புரண்ட இரண்டாவது ரயில் இதுவாகும்.

இன்று காலை தெற்கு களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டது.

நேற்று (05) இரவு மருதானையில் இருந்து தெற்கு களுத்துறைக்கு பயணித்த ரயில் பின்னர் ரயில் முனையத்திற்கு சென்று கொண்டிருந்த போதே தடம் புரண்டுள்ளது.

ரயில் தடம் புரண்டதையடுத்து, கடலோர ரயில்வேயின் ஒரு மார்க்கம் முற்றிலும் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This