உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய இலக்கம் 52 தலங்கமுவ சொரபொர ஜனபதய மஹியங்கனை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போதே உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்

Share This