உயிரிழந்தவர்களில் சிலருக்கே எலிக்காய்ச்சல்
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் இரத்தமாதிரி பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களில் சிலர் எலிக்காய்ச்சலால் தான் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய தொற்று நோயியல் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பரேரா ,
உயிரிழந்த 7 நோயாளர்களின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் சில நோயாளிகளின் மாதிரிகளில் எலிகாய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த நோய் தாக்கம் உடையவர்களுக்கு இன்புளுவன்சா அல்லது வேறு நோய்கள் உள்ளதா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இந்நோய் தொடர்பான ஆய்வுகள் விரைவாக நடத்தப்பட்டு வருவதாகவும் நிபுணர் மருத்துவர் மேலும் தெரிவித்தார்.