ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும் – சீனா கோரிக்கை

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும் – சீனா கோரிக்கை

ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சீன கோரிக்கை விடுத்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

“இராணுவ வழிமுறைகளால் பிரச்சினையை தீர்க்க முடியாது, மேலும் மோதல்கள் தீவிரமடைவது இரு தரப்பினரின் நலன்களுக்கும் உகந்ததல்ல” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், ஹார்முஸ் நீரிணையில் நிலவும் குழப்பத்திற்கு அந்த பகுதியில் நடைபெறும் சட்டவிரோத இராணுவ நடவடிக்கைகளே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகையினால், உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பில் மேலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )