இலஞ்சம் கோரிய ஹட்டன் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்சம் கோரிய ஹட்டன் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

முறைப்பாட்டாளர் மற்றும் அவரது மனைவியை சட்ட நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்க 20,000 ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹட்டனைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கினிகத்தேன காளி கோவிலில் பலிசெலுத்துதல் சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படும் ஒரு நபரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.

பின்னர் அவரது மனைவிக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி அவரிடம் 20,000 ரூபாய் இலஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது.

பணத்தைப் பெறும்போது இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Share This