இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து
வெயங்கொடை – கட்டுநாயக்க வீதியின் மினுவாங்கொட பிரதேசத்தில் இன்று (12) காலை வீதியில் பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வெயங்கொடையிலிருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கட்டுநாயக்க திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதுடன், கட்டுநாயக்க திசையிலிருந்து பேக்கரி உணவுகளை விநியோகம் செய்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி தவறான பாதையில் ஓடிக்கொண்டிருந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த இரு சாரதிகளும், அதில் பயணித்த ஒருவரும் காயமடைந்து மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் எவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.
பேக்கரி உணவுகளை விநியோகிக்கும் முச்சக்கரவண்டியின் சாரதி தூங்கியதால் தவறான பாதையில் பயணித்தமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.