இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடன் தொல்லையால் கஷ்டப்படுவார்களாம்

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடன் தொல்லையால் கஷ்டப்படுவார்களாம்

ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவரது வாழ்வில் செல்வம் அதிகரிக்க வேண்டுமென்றால் புதன் மற்றும் குரு நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதன்படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் தொல்லையால் பாதிக்கப்படுவார்கள்.

உத்திராடம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பொதுவான அமைதியான மனிதர்கள் இவர்கள்.நிதி நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மிகவும் நேர்மையானவர்கள், விசுவாசமானவர்கள். பயணங்களை அதிகம் விரும்புவார்கள். கடினமான முயற்சிகள் செய்தாலும் பணத்தை சேமிக்க முடியாது.

மூலம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் தைரியசாலிகள். சுதந்திர சிந்தனையாளர்கள். பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள். ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையுள்ளவர்கள். நிதி விடயங்களில் சில சிரமங்களை சந்திப்பார்கள். வேலை வாய்ப்புக்களை இழக்கலாம். கடன் பிரச்சினைகளில் தள்ளப்படுவார்கள். நிதி பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

பூராடம்

அழகுக்கு பெயர் பெற்றவர்கள். அமைதியாக இருப்பார்கள். உதவி செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். மற்றவர்களின் பிரச்சினைகளை முன்வந்து தீர்ப்பதால் கடனில் சிக்கிக் கொள்வார்கள். உறவினர்களாகல் சில ஏமாற்றங்கள் ஏற்படலாம்.

Share This