இந்தியாவில் இருந்து இலங்கை வர முயன்ற நால்வர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கை வர முயன்ற நால்வர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாக வர முயன்ற நால்வர் நேற்று இரவு இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கட்டப்பிராய், கோப்பாய் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சட்டவிரோதமாகக் சென்று முகாம்களில் தங்கியிருந்தோரே தாயகம் திரும்பும் நோக்கில் படகில் பயணிக்க முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் 3 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குகின்றனர்.

நால்வரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு திருச்சி சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share This