இணைய  மோசடி தொடர்பில்  பொது  மக்களுக்கு எச்சரிக்கை

இணைய மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இணையத்தளங்களில் வெளியாகும் வர்த்தக விளம்பரங்கள்  தொடர்பில்  அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையம்  பொது  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பல ஒன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்பில்  ஏற்கனவே தங்கள் நிறுவனத்துக்கு  முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையத்தின்  சிரேஷ்ட  தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார் .

 எதிர்வரும்  பண்டிகைக் காலத்தில்  குறிப்பாக தமிழ் ,சிங்கள புத்தாண்டு காலத்தில்  தள்ளுபடிகள், ரொக்கப் பரிசுகள் அல்லது சிறப்பு  விளம்பரச் சலுகைகள் என மோசடி விளம்பரங்கள் மற்றும் தீங்கிழைக்கும் இணைப்புகள்  ஒன்லைனில் தோன்றும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

இத்தகைய தீங்கிழைக்கும் இணைப்புகள், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பிற முக்கியத் தரவுகளைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்ட மோசடி வலைத்தளங்களுக்கு பயனர்களை அடிக்கடி வழிநடத்துகின்றனர்.

எனவே, ஒன்லைனில் காணப்படும் தேவையற்ற இணைப்புகள் அல்லது விளம்பரங்களை அணுகும்போது விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கையாக இருக்குமாறும்  இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையத்தின்  சிரேஷ்ட  தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல பொது  மக்களை வலியுறுத்தியுள்ளார் .

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )