இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவு

இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவு

இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் இன்று நண்பகல் வரை விடுக்கப்பட்டிருந்த மஞ்சல் எச்சரிக்கை எதிர்வரும் திங்கட்கிழமைவரை நீடிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் சில இடங்களில் 10 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு ஸ்காட்லாந்தில், இன்று நண்பகல் வரை அம்பர் பனி குறித்து விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இங்கிலாந்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் பனிப்புயல்களால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள லோச் கிளாஸ்கார்னோச்சில் நேற்று வெள்ளிக்கிழமை 8 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு இருந்ததாகவும், அபோயினில் சுமார் 9 சென்டிமீட்டர் பனிப்பொழிவு இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )