
ஆண் நண்பருடன் காரில் சென்ற மனைவி: தீ வைத்து கொளுத்திய கணவன்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்பவரின் மனைவி அனிலா.
நேற்று மாலை அனிலா அவரது ஆண் நண்பர் ஒருவருடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் சென்ற காரை பின்தொடர்ந்த பத்மராஜன் செம்மாமுக்கு எனும் பகுதியில் காரை இடைமறித்துள்ளார்.
பின் தன்னிடமிருந்த பெட்ரோலை காரின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இச் சம்பவத்தில் அனிலா மற்றும் அவரது நண்பருக்கு தீக் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அனிலா உயிரிழந்துள்ளார்.
அவரது நண்பர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பத்மராஜனை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES இந்தியா
