
அரசாங்கத்தின் வாக்குத் தளம் பற்றி வீழ்ச்சி – உதய கம்மன்பில
அரசாங்கத்தின் மீதான மக்களின் கருத்து குறித்து நடத்தப்பட்ட ரகசிய ஆய்வின் முடிவுகள் காரணமாக, மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த கணிப்பு தனியார் அமைப்பால் நடத்தப்பட்டதாகவும், அந்த அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை 24.7% ஆகக் குறைந்துள்ளதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் இப்போது நடத்தப்பட்டால், அரசாங்கத்தால் ஒரு மாகாண சபையைக் கூட வெல்ல முடியாது என்பது கசப்பான உண்மை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
CATEGORIES இலங்கை
TAGS Udaya Gammanpila
