அமெரிக்க வரி- ரணில், அரசாங்கத்துக்கு கூறும் அறிவுரை

அமெரிக்கா சர்வதேச நாடுகளை நோக்கி வித்துள்ள வரிகள் பெரும் பெருளாதார நெருக்கடிகளை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நிலைமைகளைச் சமாளிக்கும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாகத் தயாரிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் கடன்களை அரசாங்கம் வழங்கி முடிக்க வேண்டும். ஆகவே, அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி நெருக்கடியில் இருந்து மீளக்கூடிய புதிய திட்டங்கள் அவசியம் என்றும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டாலும், இலங்கையின் ஏற்றுமதிகள் குறையும் என்றும், கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைவாக 2028 ஆம் ஆண்டுக்குள் கடன்களை மீளச் செலுத்துக்கூடிய புதிய அணுகு முறைகளை அரசாங்கம் கையாள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
வெளிநாட்டு செய்தியாளர ஒருவரிடம் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.