நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி விநியோகம்

நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி விநியோகம்

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் இடம்பெறுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் எவ்வித தடையுமின்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

மேல் மாகாணத்திலிருந்து ஏற்கனவே சுமார் 500 எரிபொருள் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை இருக்காது. வதந்திகளின் அடிப்படையில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நின்றால் இந்தப் பிரச்சினை ஏற்படும்.

எரிபொருள் விநியோகத்திற்காக பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% கொடுப்பனவு இரத்துச் செய்யப்பட்டால் இவ்வாறான வதந்திகள் எழுந்துள்ளன.” என்றார்.

 

 

CATEGORIES
TAGS
Share This