
சுற்றுச்சூழல் சபை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூடியது
சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் சுற்றுச்சூழல் சபையானது, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று (02) கூடியது.
பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி தலைமையில் இச்சபையின் எதிர்வரும் அமர்வுகள் கூடவுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்த ஆண்டு கூடியுள்ளது.
கடல் சூழலில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, கடல் மாசுபாட்டைத் தடுப்பது குறித்த பொருத்தமான ஆலோசனைகள், உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதியில் நடைபெறும் செயல்பாடுகளின் நிலை மற்றும் அந்த செயல்பாடுகளால் ஏற்படும் மாசுபாடு குறித்து இந்த சபையின் ஊடாக ஆலோசனை வழங்கப்படுகின்றது.
இலங்கைக்குச் சொந்தமான கடல் பகுதியை மாசுபாட்டின்றி பராமரிப்பது மற்றும் அதன் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்குவதன் மூலம் இலங்கையின் கடல்சார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்த சபை மீண்டும் செயல்படுத்துவது, நாட்டின் நீலப் பொருளாதாரத்தை (Blue Economy வலுப்படுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதல் சுற்றுச்சூழல் சபையில் விருந்தினர்களாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி, பிரதி அமைச்சர் என்டன் ஜெயக்கொடி, அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவல, தலைவர் சமந்த குணசேகர, பொது முகாமையாளர் ஜகத் குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
