இஸ்ரேல் – காசா போரை நிறுத்தி, ரசிய – உக்ரெயன் போரையும் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அமெரக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா, ரசியாவிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தக் கூடிய சாத்தியம் இருப்பதாக மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தன்னிடம் சொன்னதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

சென்ற 15 ஆம் திகதி இது பற்றி அறிவித்திருந்த ட்ரம்ப், மீண்டும் அதனை நேற்று சனிக்கிழமை உறுதியாகக் கூறியுள்ளார். ஆனாலும் டரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக இந்திய அமைதிகாத்து வருகின்றது.

ரசியாவுடனான எண்ணெய் வர்த்தகச் செயற்பாடுகள் பாரம்பரயமான உறவு முறை என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் டொனால்ட் ட்ரம்ப் கூறியதை செய்தித் தொடர்பாளர் மறுக்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உக்ரெய்ன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் வோஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல விடயங்கள் பற்றி விபரித்தார். இந்திய – ரசிய தொடர்பாக கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ரசியாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக, நம்பிக்கையோடு தெரிவித்தார்.

அதேநேரம் 2018 முதல் 2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1.7% ஆக இருந்த ரசியாவின் பங்கு, 2023-24 நிதியாண்டில் 40% ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன

எண்ணெய் வர்த்தகத்தில் ரசியாவும் இந்தியாவும் முதல் இடத்தில் இருப்பதால், ட்ரம்ப் நிர்வாகம் ரசிய எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா மீது 25% கூடுதல் வரியை அறவிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தது.

அதேவேளை, கடந்த ஒக்ரோபர் மாத முதல் பாதியில் இந்தியா ரசிய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் நரேந்திர மோடி தன்டனிடம் உறுதியளித்துள்ளதாக ட்ரம்ப் கூறியதன் பின்னணியில், வேறு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.