பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைத்து வழிபட வேண்டும்?
நமது வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ கடவுளுக்கு பழம், மலர் மாலை, தேங்காய், பிரசாதம் ஆகியவற்றை வைத்து வழிபடுவார்கள்.
ஆனால், தண்ணீர் வைத்து கடவுளை வணங்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை.
ஏன் தண்ணீர் வைத்து வழிபட வேண்டும்?
அனைத்து உயிர்களுக்கும் மூல ஆதாரம் நீர். நீரானது தூய்மைப்படுத்தும் குணம் செழுமையாக்கும் பண்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அதன்படி பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபடும்போது நமது வாழ்வில் செழிப்பும் நேர்மறை எண்ணங்களையும் கொண்டுவர முடியும்.
இவ்வாறு வழிபாட்டுக்கு வைக்கும் தண்ணீரை வெள்ளி, தாமிரம், ஈயம் பூசப்பட்ட பித்தளை, செம்பு, மண் போன்றவற்றை பயன்படுத்துவது நன்மை தரும்.
கடவுள் வழிபாட்டின்போது வைக்கப்படும் தண்ணீரை தினசரி மாற்ற வேண்டும். இதனால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
இவ்வாறு வைக்க வேண்டிய நீர் வீட்டின் வடக்கு மூலையில் மட்டும் வேண்டும்.
மேலும் அந்தத் தண்ணீரில் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், வெட்டிவேர், துளசி இலை போன்றவற்றை போடும்போது அதிலிருந்து வெளிவரும் வாசனையானது வீட்டை கோவில் போல் மாற்றும்.