உணவு உண்ணும்போது முதலைகள் அழுக காரணம் என்ன?
உலகில் உள்ள ஆபத்தான விலங்குகளில் முதலையும் ஒன்று. ஆனால், முதலைகள் உணவு உண்ணும்போது அழுகின்றன. இதுகுறித்து பலருக்குத் தெரிவதில்லை.
முதலைகள் உணவை மென்று உண்ணும்போது, அதன் தாடைகளின் இயக்கம் அதன் சைனஸில் காற்றைத் தள்ளுகிறது.
இக் காற்று வெளி தள்ளப்படுவதால், முதலையின் கண்ணின் லொக்ரிமல் சுரப்பி எரிச்சலுக்குள்ளாகிறது.
அப்போது முதலையின் கண்களில் இருந்து கண்ணீர் வரும்.
இதனாலேயே ஒவ்வொரு தடவையும் உணவு உண்ணும்போது முதலையின் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது.