குழந்தைகளை தாக்கும் வைரஸ்…இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்
இன்ஃப்ளூவென்ஸவைப் போன்ற நோயொன்று இலங்கையில் சிறுவர்களிடையே பரவி வருகின்றமை பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோய்ப் பரவலுக்கு காய்ச்சல், குளிர், தலைவலி, மூக்கில் அடைப்பு, ஒழுகுதல், தசை அல்லது உடல் வலி, குமட்டல், சோர்வு, பசியின்மை மற்றும் தொண்டைப் புண் ஆகிய அறிகுறிகள் தென்படும் என குழந்தைகள் நல மருத்துவரும் ஊடக ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் மஹேஷ்க விஜயவர்தன அறிவுறுத்தியுள்ளார்.
இது ஒரு பருவகால நோயாகும். இது சில நேரங்களில் அதிகரிக்கும் சில நேரங்களில் குறையும்.
சில மாதங்களுக்கு முன்பு இதன் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
இருப்பினும் முகமூடி அணிவது, கைகளை சரியாக கழுவுதல் போன்ற நல்ல சுகாதாரத்தை பேணுவது ஆகியவை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
கல்வி நிலையங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் இப் பரவல் அதிகம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் உடல் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை கல்வி நிலையங்கள் அல்லது குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவததைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மருத்துவர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இதுபோன்ற காய்ச்சல் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பரவி வருவது பொதுவான வகை காய்ச்சல். ஆனால், கொங்கோவில் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. மேலும் இப் பரவலுக்கான சரியான காரணம் அங்கு இன்னமும் கண்டறியப்படவில்லை.
அத்துடன் கொங்கோ நாட்டில் பரவும் இந் நோய் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு எனவும் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் நாம் தற்போது பயப்படத் தேவையில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.