விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்பட டீசர்…இன்று வெளியாகவுள்ளது

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்பட டீசர்…இன்று வெளியாகவுள்ளது

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள அவரது 62 திரைப்படமான வீர தீர சூரன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இத் திரைப்படத்தில் விக்ரம் காளி என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் டைட்டில் டீசர், போஸ்டர்கள் ஆகியன சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின.

இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இத் திரைப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பதோடு எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.

Share This