வணங்கான் திரைப்பட இசை வெளியீட்டு விழா…திகதி அறிவிப்பு
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் வணங்கான்.
இத் திரைப்படத்தை வி கவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களை பழி வாங்கும் கதையாக இது அமைந்துள்ளது.
இப் படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதோடு இப் படம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதுமட்டுமின்றி திரையுலகில் பாலா காலடி எடுத்துவைத்து 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை கொண்டாடும் விதமாகவும் இவ் விழா அமையவுள்ளது.