அமெரிக்க – பாகிஸ்தான் புதிய உறவு, இந்தியாவுக்கு எச்சரிக்கையா?

அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கமான உறவை பேணிவரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க – பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் வர்த்தக செயற்பாடுகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் பேசப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சந்திப்பில் உள்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் துணை அதிபர் ஜே டி வான்ஸ் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். மார்கோ ரூபியோதான் கடந்த வாரம் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கலாம் என்று எச்சரித்திருந்தார்.
இச் சந்திப்பு தொடர்பாக புதுடில்லி ஊடகங்கள் பல சந்தேகங்களை வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அமெரிக்காவுடன் 2004 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்த உறவு, இந்திய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பின்னணியில் அப்போதைய காங்கிரஸ் அரசு வேறு வகையான உத்திகளை கையாண்டிருந்தது,
தற்போது மோடியின் ஆட்சியில் அமெதரிக்கா இந்தியாவுக்கு விதித்துள்ள பொருளாதார வரிகள் அதிகமாக உள்ளன. அத்துடன் ரசிய – உக்ரெயன் போரில் இந்தியா ரசியாவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றது.
இப் பின்புலத்தில் அமெரிக்கா மீண்டும் பாகிஸ்தான் அரசுடன் உறவை பேண விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திப்பு முடிவடைந்த பின்னர் அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க – பாகிஸ்தான் புதிய உறவு என்ற தொனி வெளிப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் நோக்கில் பாகிஸ்தான் அரசுடன் உறவை பேணுவது சிறப்பான புதிய முயற்சி என அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தோ – பசுபிக் விவகாரத்தில் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள புதிய உறவு சீன – பாகிஸ்தான் உறவை கேள்விக்குள்ளாக்கம் என்று இந்திய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.