மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்
குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி தொடங்கியது. இக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் கூட்டத்தொடரில் சில பிரச்சினைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக் கூட்டம் தலைநகர் டில்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 1 மணியளவில் நடைபெறள்ளது.
இக் கூட்டத்தில் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி. அரசின் சில முக்கிய திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.