அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் சந்திப்பு, அற்புதம் என்கிறார் ட்ரம்ப், ஆனால் ஜின்பிங் அமைதிகாத்தார்

அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் சந்திப்பு, அற்புதம் என்கிறார் ட்ரம்ப், ஆனால் ஜின்பிங் அமைதிகாத்தார்
அமெரிக்க - சீன ஜனாதிபதிகள் சந்திப்பு

அரசியல் – பொருளாதார அதிகாரப் போட்டியில் விவாதித்துக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தென் கொரியாவில் இன்று புதன்கிழமை பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த விரிவான சந்திப்பு அற்புதமாக இருந்தது என ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ஆனால் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் எதையும் ஜி ஜின்பிங் ஊடகங்களிடம் வெளிப்படுத்தவில்லை.

தென்கொரியாவில் இடம்பெற்ற தலைமைத்துவம் பற்றிய சர்வதேச உச்சி மாநாட்டில் பங்கு பற்றிய பின்னர் இரு தலைவர்களும் நேரடியாக சந்தித்து உரையாடியுள்ளனர். சந்திப்பு ஒன்றரை மணி நேரம் இடம்பெற்றது.

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்க – சீன போட்டி நிலவரும் சூழலில், இடம்பெற்ற இந்த சந்திப்பு பயன்மிக்கதாக இருந்தாலும், பல விடயங்களில் முரண்பாடுகள் தீர்க்கப்படக் கூடிய முறையில் உரையாடல் அமையவில்லை என அமரிக்க செய்தி நிறுவனமான ரொய்டர்ஸ் (Reuters) விமர்சித்துள்ளது.

அமெரிக்க – சீன அரசுகளிடையே நிலவும் அரிய மண் தாதுக்கள் வழங்குவது தொடர்பான சர்ச்சை தீர்க்கப்பட்டுவிட்டது என டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக த ரொயடர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை இன்றைய உரையாடலில் பல விடயங்கள்  தவிர்க்கப்பட்டாலும், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வதாகவும், அங்கு நடைபெறவுள்ள பேச்சில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் எனவும் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜி ஜின்பிங், டொனல்ட் ட்ம்பை சீனாவுக்கு வருமாறு இன்றைய சந்திப்பில் அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதேநேரம், ரசிய- உக்ரெயன்  போர் நிறுத்த விடயத்தில் அமெரிக்க – சீன அரசுகள் இணைந்து செயற்பட வேண்டும் என்ற வேண்டுகோளை சீன ஜனாதிபதி ஏற்றதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் ரசிய – சீன பொருளாதார உறவுகள் பற்றி குறிப்பாக ரசியாவிடம் இருந்து சீனா எண்ணெய் கொள்வனவு செய்வது குறித்தும் தைவான் விவகாரம் தொடர்பாகவும் உரையாடவில்லை என கூறியுள்ள டொனால்ட் ட்ரம், அது பற்றி விரிவாகவும் நம்பிக்கையோடும் உரையாட வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதேநேரம் இச் சந்திப்பு தொடர்பாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இதுவரை கருத்து வெளியிடவில்லை. சீன ஊடகங்கள் சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், சீனாவின் கோரிக்கைகளுக்கு அமெரிக்கா இணங்கியது என்ற தொனியில் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க – சீன உறவிற்கு அமெரிக்கா வழிவிட வேண்டிய பல சந்தர்ப்பங்கள் இருப்பதாக குளோபல் ட்ரைம்ஸ் (globaltimes) என்ற சீனா அரசின் ஆங்கில ஊடகம் விமர்சித்துள்ளது.

Share This