அதிவேக இணைய வசதி கொண்ட டொப் 10 நாடுகள்
அனைவருக்கும் இணையம் வேகமாக தொழிற்பட வேண்டும் என்றுதான் ஆசை. அந்த வகையில் அதிவேக இணைய வசதியைக் கொண்ட உலகின் டொப் 10 நாடுகள் குறித்து பார்ப்போம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இணைய வேகம் வினாடிக்கு 292 மெகா பைட். அடுத்ததாக சிங்கப்பூரில் இணைய வேகம் 291 மெகா பைட்.
ஹொங்கொங்கில் 277.26 மெகா பைட் வேகம் கொண்டது. சிலியில் 263.89 மெகா பைட் அளவு வேகம் கொண்டது.
ஐந்தாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு 243 மெகா பைட் இணைய சேவை உள்ளது. ஆறாவது இடத்தில் தாய்லாந்தும் ஏழாவது இடத்தில் ஐஸ்லாந்தும் உள்ளது.
பிரான்சில் இணைய சேவை வினாடிக்கு 226.21 மெகா பைட்டாக உள்ளது. டென்மார்க் 9 ஆவது இடத்திலும் ஸ்பெயின் 10 ஆவது இடத்திலும் உள்ளது.