ஐக்கிய மக்கள் சக்தி Archives - Oruvan.com

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் ஐ.தே.க கலந்துகொள்ளாது
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எந்தவொரு கட்சியினதும் மே தினப் பேரணிகளில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளாது என அந்தப் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தமது மே தினப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்புக்குப் பதிலளிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட மே முதலாம் திகதி பௌர்ணமி தினத்தில் அமைந்துள்ளதால், அன்றைய தினம் அரசியல் பேரணிகள் அல்லது ஏனைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதனை மத வழிபாடுகளுக்காக ஒதுக்க ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பிரதமராக இருந்த காலத்தில், மே முதலாம் திகதி பௌர்ணமி தினமாக அமைந்தால் அன்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்று சுட்டிக்காட்டியிருந்தமையை தலதா அத்துகோரல தனது கடிதத்தில் நினைவூட்டியுள்ளார். அதன் அடிப்படையிலேயே இம்முறை இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றத் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் ஐ.தே.க கலந்துகொள்ளாது appeared first on Oruvan.com.

சரித ஹேரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய நியமனம்
பேராசிரியர் சரித ஹேரத் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட அவர், சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக கட்டுகம்பொல தேர்தல் தொகுதியின் அமைப்பாளராகப் பணியாற்றி தமது ஆதரவை வழங்கியிருந்தார்.

பேராசிரியர் சரித ஹேரத்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

The post சரித ஹேரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய நியமனம் appeared first on Oruvan.com.

ஐ.தே.க. மற்றும் ஐ.ம.ச. இணைந்து செயற்பட வேண்டும்
‘ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். அதனால் இந்த இணைப்பு விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று (31) நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,’ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளும் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு கட்சியினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு இணைந்து செயற்படும்போது அந்த நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான கலந்துரையாடல்களே தற்போது இடம்பெறுகின்றன.

இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்றிருக்கின்றன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின்போது பல முன்னேற்றகரமான விடயங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம். இரண்டு கட்சிகளும் இணைந்து நாட்டின் ஆட்சிக்கு வந்து, மக்களுக்கு நல்ல சேவையை வழங்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.

தலைமைத்துவம் தொடர்பில் நாங்கள் யாரும் தற்போது அதுதொடர்பில் கதைக்கவில்லை. அது எங்களுக்கு தற்போது பிரச்சினையாக தெரியவில்லை. எதிர்காலத்தில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளலாம் என நம்புகிறோம்.

அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சி நடத்தும் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்துகொள்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி, அது தொடர்பில் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.

நாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதால், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும். எமது பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் அனைத்து கட்சிகளுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். அதில் பிரச்சினை இல்லை.

என்றாலும் இன்னும் காலம் இருப்பதால், தற்போது கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்காத கட்சிகள் இறுதி நேரத்தில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் இருக்கிறது’ என்றார்.

The post ஐ.தே.க. மற்றும் ஐ.ம.ச. இணைந்து செயற்பட வேண்டும் appeared first on Oruvan.com.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் வெளியிட்ட அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், கூட்டுத் திட்டத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேற்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும் இந்த ஒருமனதாக முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரேமதாச, இரு கட்சிகளின் தனிப்பட்ட அடையாளங்களைப் பேணுவதோடு, நாடும் அதன் குடிமக்களும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நடைமுறை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட கொள்கை ஒப்பந்தங்களில் இரு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று கூறினார்.

The post ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் வெளியிட்ட அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஐ.ம.ச.வில் இணைந்தவர்களுக்கான அனைத்து தடை உத்தரவுகளும் நீக்கம்
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையினால் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று (16) மாலை கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கை எடுப்பதில் ஏற்படக்கூடிய சட்ட பின்னணி குறித்து ஆராய முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையிலான குழுவை நியமிக்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த தீர்மானத்தின் ஊடாக மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், அதன் தலைமையகமான சிறிகொத்தாவில் குறித்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பங்கேற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலான யோசனை ஒன்றும் இதன்போது நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

The post ஐ.ம.ச.வில் இணைந்தவர்களுக்கான அனைத்து தடை உத்தரவுகளும் நீக்கம் appeared first on Oruvan.com.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியுடள் இணைவதற்கா பிரிந்து சென்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு குழுக்களும் ஒரு பொது அரசியல் கூட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளமை இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல கட்சிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் போது ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிதியை மோசடி செய்ததாக கூறி கடந்த 22ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், அவரின் உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 26ஆம் திகதி பிணை வழங்கப்பட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சஜித், ரணிலை நேரில் பலமுறை சந்தித்து நலம் விசாரித்து வந்திருந்தார்.

இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ரணில் தனது கட்சித் தலைமையிலிருந்து விலகுவாரா அல்லது சஜித் பிரேமதாசவை மீண்டும் தனது தலைமையின் கீழ் இணைய அழைப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த அழைப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியில் பொது செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சண்டே டைம்ஸிடம் கருத்து தெரிவிக்கையில்,

“தனது கட்சிக்கு கிடைத்த அழைப்பின் பேரில் சஜித் பிரேமதாசவும் மற்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்பதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித் appeared first on Oruvan.com.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி எவ்வாறு மலர்ந்தது? ஹர்ஷண ராஜகருணா விளக்கம்
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா, “எமது கட்சியில் ஏற்பட்ட பிளவுகளே தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவந்தன” என தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், “அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்போம்” என்றும் உறுதியாகக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எந்தவொன்றையும் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக ‘செய்ய மாட்டோம்’ என அறிவித்தவைகளைத்தான் செய்து வருகிறது.

பொருட்களின் விலை அச்சுறுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளன. மக்கள் நாளைய வாழ்வை எப்படி சமாளிப்பது எனவே தெரியாத நிலை. அதில் கூட, அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி மக்கள்மீது இன்னும் சுமைகளை திணித்து வருகிறது.

இதன் விளைவாக, இந்த அரசாங்கம் ஒரே ஒரு தவணைக்காலத்திற்கே ஆட்சி செய்யும்.

அநுர குமார திசாநாயக்க அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறியிருந்தாலும், அவரது ‘மீட்டர்’ இயக்கம் இல்லை. ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில், அளித்த வாக்குறுதிகளில் நூற்றுக்கு 5 வீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது” என விமர்சித்தார்.

The post தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி எவ்வாறு மலர்ந்தது? ஹர்ஷண ராஜகருணா விளக்கம் appeared first on Oruvan.com.

கொழும்பை ஆளப்போவது யார்?
பல தசாப்தங்களாக தனது ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த மிக முக்கிய உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான கொழும்பு மாநகர சபையை இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது. குறித்த சபைக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும் ஆட்சி அமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலம் தேசிய மக்கள் சக்திக்கும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் எதிரணிகளை ஒன்றிணைத்து கொழும்பு மாநகரசபையில் ஆட்சி நிலைநாட்டப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 81 ஆயிரத்து 814 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு 48 இடங்கள் கிடைத்துள்ளன.

58 ஆயிரத்து 375 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 உறுப்பினர்களும், 26 ஆயிரத்து 297 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 பேரும் சபைக்கு தெரிவாகியுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மாநகரசபையில் 9 ஆயிரத்து 341 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 5 இடங்களும், 8 ஆயிரத்து 60 வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரசுக்கு 4 இடங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களுக்களில் இருந்து 18 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மையை பெறுவதற்கு 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் தேசிய மக்கள் சக்திக்கு இன்னும் 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.

மறுபுறத்தில் எதிரணி மற்றும் சுயேச்சைக்குழுக்கள் வசம் 69 இடங்கள் உள்ளன.

இந்நிலையிலேயே கொழும்பு மாநகரசபையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்துவருகின்றது.

The post கொழும்பை ஆளப்போவது யார்? appeared first on Oruvan.com.

சஜித் இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியா?
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டுவிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை கைவிட்டு கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது.

சஜித் பிரேமதாச கூட்டணியில் ஆர்வம் காட்டவில்லை போல் தெரிகிறது.” எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, சஜித் பிரேமதாச ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையை நிறுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

The post சஜித் இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியா? appeared first on Oruvan.com.

ரணில் – சஜித் கட்சிகள் இணையும் சாத்தியம் அதிகம்
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்குரிய சாத்தியம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இணைவது என்பது பற்றி ஆராயப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இரு தரப்பும் இணைந்து செயற்பட வேண்டும் எனக் கட்சி ஆதரவாளர்கள் கோருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி தற்போது கூட்டணியாகவே செயற்படுகின்றது. எனவே, இந்த இணைவு பற்றியும் ஆராயப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 45 எம்.பிக்கள் உள்ளனர். மாற்றுக் கட்சிகளுக்குச்  செல்ல வேண்டிய தேவைப்பாடு எமக்குக் கிடையாது. எனவே, கூட்டணி பற்றியே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.

The post ரணில் – சஜித் கட்சிகள் இணையும் சாத்தியம் அதிகம் appeared first on Oruvan.com.