ஜேர்மனிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்ராலின் பிரித்தானியா பயணம், ஈழத்தமிழர்களை சந்திப்பாரா?

ஜேர்மனிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்ராலின் பிரித்தானியா பயணம், ஈழத்தமிழர்களை சந்திப்பாரா?
ஜேர்மனிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்ராலின் பிரித்தானியா பயணம்

ஐரோப்பிய நாடுகளிலர் வாழும் தமிழர்கள், தமிழ் நாட்டுக்கு வருகை தந்து முதலீடு செய்ய வேண்டும் என் முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மனி நாட்டுக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்ராலின், அங்கு வாழும் தமிழ் நாட்டுத் தமிழர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். தமிழக கலை இயக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்த்து உரையாடியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் ஜேர்மனயில் வாழும் ஈழத்தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தாக செய்திகள் வெளியாகவில்லை. அங்கு வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அவர், தமிழ் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மனியில் பல முதலீட்டார்களை அவர் சந்தத்து உரையாடினார். ஜேர்மனியின் அரச முதலீட்டாளர்கள் உட்பட ஜேர்மனியில் இருக்கும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோடும் சந்திப்பு இடம்பெற்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனி நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் ஸ்ராலின் சந்தித்தார்.

அதேவேளை ஜேர்மனி நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று திங்கட்கிழமை அவர் பிரித்தானியாவுக்குச் செல்கிறார். ஆங்கு வாழும் தமிழ் நாட்டு மக்களை சந்தித்து உரையாடவுள்ள அவர் முதலீடு செய்யுமாறும் அழைப்பு விடுக்கவுள்ளார்.

தமிழ்நாட்டின் பொருளாதார அபிவிருத்திகளை மையமாகக் கொண்டு ஜேர்மனிக்கு சென்ற சனிக்கிழமை காலை பயணம் செய்த முதலமைச்சர் ஸ்ராலின், பிரித்தானிய பயணத்தின் போது, பிரித்தானிய முதலீட்டாளர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை 2 ஆம் திகதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். 3 ஆம் லண்டனில் முதலீட்டாளர்களைச் சந்திக்கவுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழர் நலவாரியம் சார்பில் 4 ஆம் திகதி நடைபெறும் நிகழ்வுகளில் பெரியார் படத்தை திறந்து வைக்கிறார். எதிர்வரும் 8 ஆம் திகதி அவர் சென்னைக்குத் திரும்புவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளை வண்டனில் வாழும் ஈழத்தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஸ்ராலின் சந்திப்பாரா இல்லையா என்று எதுவும் தெரிவிக்கக்படவில்லை.

Share This