தென் ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்துக்குள் சிக்குண்ட ஆறு தொழிலாளர்கள் உயிரிழப்பு

தென் ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்துக்குள் சிக்குண்ட ஆறு தொழிலாளர்கள் உயிரிழப்பு

தென் ஆபிரிக்காவின் ஸ்டில்போன்டைன் எனும் இடத்தில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்துக்குள் தங்கம் எடுப்பதற்காக பல சுரங்கத் தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.

சுரங்கத்துக்குள் சென்ற அவர்கள் எதிர்பாராத விதமாக அதற்குள் சிக்கியுள்ளனர்.

சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சிக்கிக் கொண்டவர்களுள் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுள்ள பொலிஸார், மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. ஆனால், நூற்றுக்கும் அதிகமானோர் அதற்குள் இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This