ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருதய சத்திரசிகிச்சை அவசியம் – பிரதிப் பணிப்பாளர் தகவல்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருதய சத்திரசிகிச்சை அவசியம் – பிரதிப் பணிப்பாளர் தகவல்

அரசியல் காரணங்களின் பிரகாரம் ஊழல்  மோசடிக் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவக்கு இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமென வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்சான் பெல்லன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவருடைய உடல் நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளது. ஆனாலும் இருதயத்தில் பல அடைப்புகள் உள்ளன. ஆகவே சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தேசிய வைத்தியாசலையில் தற்போது இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியாது. ஏனெனில் பலர் காத்திருப்பு படிட்டியலில் உள்ளனர். ஆகவே ரணில் விக்கிரமசிங்க தனியார் வைத்தியசாலையில் அந்த சிகிச்சையை விரும்பினால் செய்யலாம்.

அவ்வாறு இல்லையேல் ஆக குறைந்தது இரண்டு வருடங்கள் வரை அவர் காத்திருக்க வேண்டியிருக்கும். உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்கள் பலரும் வெளியில் காத்திருக்கின்றனர்.

ஆகவே முன்னுரிமை அடிப்படையில் இருதய சத்திரசிச்சைகளை செய்ய முடியாது. இதன் காரணமாக தனியார் வைத்தியசாலையில் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க சத்திரசிச்சையை செய்ய முடியும் என்று மருத்துவர் பெல்லன மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share This