புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம்…இந்திய வானிலை மையம்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம்…இந்திய வானிலை மையம்

இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘நேற்று முதல் இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம்.

இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு, வடமேற்கு திசையினூடாகச் சென்று எதிர்வரும் 12 ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை – தமிழக கடற்கரையை நோக்கி நகரலாம்.

இதனால் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது’  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This