தந்தை தொடர்பில் நேத்ரன் மகள் போட்ட பதிவு
சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்கு முழு சினி உலகமும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது மூத்த மகள் அபிநயா அவரது தந்தை தொடர்பில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “உங்களை ஒரு ஹீரோவாக பார்க்க இந்த உலகம் தவறிவிட்டது. ஆனால், நீங்கள் எப்பொழுதும் எங்களுக்கு பிடித்த ஒரு ஹீரோவாக இருந்துள்ளீர்கள்.
உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போனது உங்கள் தவறல்ல. நாங்கள் அதனை செய்வோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.