ஜப்பான் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் கட்சி தோல்வி. பிரதமர், பதவி விலகினார்

ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்துள்ளது. பெரும்பான்மை இழந்ததால் பிரதமர் ஷிகேரு இஷிபா பதவியில் இருந்து விலகியுள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் விதித்த பொருளாதார வரி பாதிப்புகள் காரணமாக ஜப்பானில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.
குறிப்பாக ஜப்பான் மக்கள் கூடுதலாக பயன்படுத்தும் அரிசிக்கான வரிகளை அமெரிக்கா விதித்தால் மக்கள் கடும் விசனமடைந்தனர்
லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரான பிரதமர், மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டார். அமெரிக்க வரிக்கு மாற்றீடாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் அரசியின் விலை அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் லிபரல் ஜனநாயக கட்சிக்கு எதிராக ஜப்பானில போராட்டங்களை தொடர்ந்து நடத்தினர். இதன் காரணமாக ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் தேர்தல் நடந்தது.
இரண்டு சபைகிளிலும் தோல்வியை சந்தித்து லிபரல் ஜனநாயக கட்சி, பெரும்பான்மையை இழந்தது. கடசிக்குள் உள்ளக மோதல்களும் ஆரம்பித்துள்ளன. இதனால் கட்சித் தலைவர் பதவியையும் பிரதமர் பதவியையும் அவர் இழந்தார்.
தானகவே பதவி விலகிய ஷிகேரு இஷிபா, தவறுகளை ஒப்புக் கொண்டார். அத்துடன் அடுத்த தலைமுறைக்கு வழிவடுவதாவும் பெருமையோடு கூறினார் ஷிகேரு இஷிபா.
இதேவேளை ஜப்பானில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பெரும்பான்மை இல்லாத பின்னணியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் தலைவர்களிடையே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தை விட குறைவான உறுப்பினர்களைக் கொண்டுள்ள எல்.டி.பி. அதன் கூட்டணிக் கட்சிகள் பலத்துடன் ஆட்சியை அமைப்பது குறித்தும் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.