யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண், கனடா மொன்றியல் நகர சபைக்கு தெரிவு

கனடா கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா என்ற பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் இவருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணியான லிங்கராஜா தியாகராஜா, சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதம் ஆகியோரின் மகளான மிலானி தியாகராஜா, கனடாவின் கோட் டெஸ்-நெய்ஜ் பிரதேசத்தில் பிறந்து, அங்கு கல்வி கற்றார்.
கனடா சேவை மையத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இப் பெண், மக்களுக்கு நீண்டகாலமாக சேவை செய்து வந்தார்.
மொன்றியல் நகரத்தின் தூய்மை – பாதுகாப்பு போன்றவற்றை உறுதிசெய்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்வதே தனது பிரதான நோக்கம் என்று இவர் செய்தயாளர்களிடம் கூறினார். வீடற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் கூறினார்.
