
இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையுயர்வு!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5kg எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை, 3990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
அத்துடன், 5kg எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 1602 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மேலும், 2.3kg எரிவாயு சிலிண்டரின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
