உருளைக்கிழங்கு – சீனி இறக்குமதியில் மோசடி – சஜித், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரிக்கை

ஊழல் மோடியை முற்றாக ஒழிப்போம் என மக்களிடம் வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அநுர அரசாங்கம், உருளைக்கிழங்கு – சீனி இறக்குமதியில் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் உருழைக்கிழங்கு – பெரியவெங்காயம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி முன் யோசனை அற்ற செயற்பாடு எனவும் விளக்கமளித்தார்.
ஊழல் மேடியில் ஈடுபட்ட சிலர் அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவை மாவட்டம் மின்னேரியா பிரதேசத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் மக்கள் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அங்கு விசாயிகள் பலர் பங்குபற்றியிருந்தனர். அவர்களுக்கு விளக்கமளித்த சஜித் பிரேமதாசா, விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய விரி நடைமுறைகள் எதனையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை என்று கூறினார்.
உருளைக்கிழங்கு – பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது நன்மை பயக்கும் வரி அல்ல என்று சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, பெருமளவில் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படடு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
எதிர்க் கட்சி என்ற அடிப்படையிலும் மக்கள் நலன் என்ற நோக்கிலும் பாதிக்கப்ட்ட விவசாயிகளுக்கு முந்த உதவிகளை வழங்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப் பணியில் ஈடுபடுவர் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அங்கு கேட்டறிந்த சஜித் பிரேமதாச, பல முறைப்பாடுகளை பெற்றுக் கொண்டார். தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
அதேவேளை அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், விவசாயிகளுக்கு அதிகளவு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.