மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை – மீன் வளத்துறை எச்சரிக்கை

மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை – மீன் வளத்துறை எச்சரிக்கை

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

இது இன்று செவ்வாய்க்கிழமை மேற்கு, வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் வடகிழக்கு பருவ மழையின் நான்காவது சுற்று மழைப்பொழிவு தீவிரமடைய இருக்கிறது.

இதனையொட்டி, ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மறு அறிவித்தல் வரும் வரையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு கிலோமீட்டர் 45-55 வேகத்தில் வீசக்கூடும் என்ற காரணத்தால் மீன் வளத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Share This