
நிறுவனங்களின் பழைய கட்டமைப்பு முறைகளை நவீனமயமாக்க AI-வலுவூட்டப்பட்ட ‘EWIS AEGIS’ அறிமுகம்
இலங்கையின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான EWIS, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பழைய (Legacy) கட்டமைப்பு முறைகளை அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் நவீனமயமாக்குவதற்காக ‘EWIS AEGIS’ எனும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. வங்கிச் சேவை, காப்புறுதி, அரசாங்கத் துறை, தொலைத்தொடர்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற முக்கிய துறைகளில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய ‘Mission-critical’ மென்பொருள் கட்டமைப்புகளை எவ்வித இடர்களும் இன்றி மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
பொதுவாக, இத்தகைய பழைய கட்டமைப்புகளை நவீனமயமாக்குவது என்பது மிகுந்த செலவு மற்றும் சிக்கல்கள் நிறைந்த ஒரு செயலாகக் கருதப்படுகிறது. இதனால் ஏற்படும் நீண்ட கால தாமதம் மற்றும் செயல்பாட்டுத் தடங்கல்களைத் தவிர்க்க, EWIS AEGIS ஒரு ‘Simulation-first’ (முதலில் பாவனை செய்து பார்த்தல்) முறையைக் கையாள்கிறது. அதாவது, மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே, அவற்றை ஒரு டிஜிட்டல் சூழலில் இயக்கிப் பார்த்து (Digital Twin), அதன் விளைவுகளை உறுதிப்படுத்திக் கொள்ள இந்தத் தொழில்நுட்பம் வழிவகுக்கிறது. காப்புரிமை நிலுவையிலுள்ள இந்தத் தனித்துவமான தொழில்நுட்பம், ஆசிய பிராந்தியத்தில் இத்தகைய வசதியை வழங்கும் மிகச்சில தளங்களில் ஒன்றாகும்.
EWIS AEGIS வழங்கும் முக்கிய நன்மைகள்:
-
AI-Driven Code Intelligence: பழைய மென்பொருள் கட்டமைப்புகளின் தர்க்கங்களை (Logic) எளிதாகப் பிரித்தெடுத்துப் பகுப்பாய்வு செய்கிறது.
-
Dependency Mapping: மென்பொருள்களுக்கு இடையிலான தொடர்புகளைக் கண்டறிந்து, மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணிக்கிறது.
-
Digital Twin Simulation: நிஜமான மாற்றங்களைச் செய்வதற்கு முன், அதன் செயல்பாட்டை ஒரு மெய்நிகர் பிரதி மூலம் உறுதிப்படுத்துகிறது.
-
செலவு குறைப்பு: தேவையற்ற மறுவேலைகளைத் தவிர்ப்பதன் மூலம் மேலதிக செலவுகள் மற்றும் நேர விரயத்தைக் குறைக்கிறது.
இது குறித்து EWIS குழுமத்தின் தலைவர் சஞ்ஜீவ விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “பாரம்பரியமாக பழைய கட்டமைப்புகளை மாற்றுவது என்பது அதிக இடர் நிறைந்தது. ஆனால், EWIS AEGIS மூலம் நிறுவனங்கள் அந்த நிச்சயமற்ற தன்மையை நீக்கி, முழுமையான கட்டுப்பாட்டுடன் நவீனமயமாக்கல் பணிகளை முன்னெடுக்க முடியும்,” என்றார்.
அதேபோல், குழுமத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி இசுரு திஸாநாயக்க குறிப்பிடுகையில், AI மற்றும் Digital Twin தொழில்நுட்பங்களின் இணைப்பானது நிறுவனங்களுக்குத் தங்களின் மாற்றங்கள் குறித்து ஒரு தெளிவான நம்பிக்கையை வழங்கும் என்றும், இதன் மூலம் பெரிய அளவிலான கட்டமைப்பு மாற்றங்களின் போது ஏற்படும் தோல்விகளை முற்றாகத் தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள EWIS AEGIS, நிறுவனங்கள் தங்களின் பழைய உள்கட்டமைப்பிலிருந்து நவீன டிஜிட்டல் தளங்களுக்குத் தடையின்றி மாறுவதற்கு ஒரு முழுமையான மற்றும் நம்பகமான தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
