யாழ்ப்பாணம், நாவற்குழி பிரதேசத்தை சேர்ந்த பெண ஒருவர், தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவற்குழி ஐயனார் கோவிலடி பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான பெண் ஒருவரே தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை செய்து உயிரிழந்த பெண் தனது காதலனுடன் இணைந்து போதைக்கு அடிமையான நிலையில், கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்துள்ளார். தீயை அனைத்து உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார்.
ஆனாலும் சிகிச்சை பயனின்றி அவர் நேற்று 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் நடத்தினார். காதலன் உட்பட வேறு சிலரும் சாட்சியம் வழங்கினர்.
தீயை அனைத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தாக சாட்சியத்தின் போது காதலன் மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார். மேலும் விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.