இலகுவான கடவுச் சொற்கள் வேண்டாம்…இதை செய்ங்க
உலகளாவிய ரீதியில் போடப்படும் கடவுச் சொற்கள் பெரும்பாலும் 123456 என்றே உள்ளது.
உலகளவில் 30,18,050 பயனர்கள் இதனை அவர்களது கடவுச் சொற்களாக வைத்துள்ளனர்.
அடுத்தது உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கடவுச் சொல் 123456789 என்பதாகும்.
அடுத்ததாக password என்ற வார்த்தையையும் பலர் கடவுச் சொற்களாக பயன்படுத்துகின்றனர்.
உண்மையில் இதுபோன்ற இலகுவான கடவுச் சொற்களை எளிதில் ஹேக்கர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
இதுபோன்ற கடவுச் சொற்களை 78 சதவீதம் ஹேக்கர்கள் கண்டுபிடித்துவிடுகின்றனர்.
இதனை எவ்வாறு கையாள்வது?
- தனித்துவமான கடவுச் சொற்களை பயன்படுத்துங்கள்.
- குறைந்தபட்சம் 20 எழுத்துக்கள் மற்றும் எண்கள் இருக்கும்படியாக அமைத்துக் கொள்ளவும்.
- ஒரே கடவுச் சொல்லை பல அக்கவுண்ட்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.
- வேலை சார்பான அக்கவுண்ட்களுக்கு எப்பொழுதும் தனித்துவமான பலமான கடவுச் சொற்களை பயன்படுத்த வேண்டும்.