உங்க தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக வீடுகளில் பல்லி, கரப்பான் பூச்சி, எறும்பு போன்ற உயிரினங்கள் காணப்படும். அதில் பல்லியை எடுத்துக் கொண்டால், சில நேரங்களில் நம் மீது விழுந்துவிடும்.
அவ்வாறு நம் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் என்று இப் பதிவில் பார்ப்போம்.
பல்லி நம் தலையில் விழுவது கெட்ட சகுனத்தை குறிக்கிறது. இதனால் மற்றவர்களுடன் சண்டை, நெருங்கியவர்களின் மரணம், மனதில் அமைதியின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
முகத்தில் பல்லி விழுந்தால், வீட்டுக்கு உறவினர்கள் வருவார்கள். நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால், புகழ் வந்து சேர்வதோடு கீர்த்தி உருவாகும். புருவத்தில் பல்லி விழுந்தால் அரசாங்க பதவியில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும்.
மூக்கின் மீது பல்லி விழுந்தால் நோய் ஏற்படுவதோடு பிரச்சினை உருவாகும். இடதுக் கண் பக்கம் பல்லி விழுந்தால், சுகம். வலதுக் கண் பக்கம் பல்லி விழுந்தால், தண்டனை கிடைக்கலாம்.
வலது காதின் மேல் பல்லி விழுந்தால் நல்ல ஆயுள் இருக்கும். இடது காதின் மீது பல்லி விழுந்தால் வியாபார உயர்வு கிடைக்கும். கழுத்தின் இடப் பக்கம் பல்லி விழுந்தால், காரிய சித்தியும் வலது பக்கத்தில் விழுந்தால் பகையும் உண்டாகும்.
இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகம். வலது பக்க மார்பில் விழுந்தால் இலாபம் கிடைக்கும். வயிற்றுப் பகுதியில் விழுந்தால் தானியங்கள் சேரும். தொப்புள் பகுதியில் விழுந்தால் தங்கம், வைரம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.
இடது தோளில் விழுந்தால் சுகபோகம் ஏற்படும். வலது தோளில் விழுந்தால் வெற்றி கிட்டும். இடது கை மணிக்கட்டில் விழுந்தால் நற்செய்தி வந்து சேரும். வலது கை மணிக்கட்டில் விழுந்தால் உடல்நலம் பாதிப்படையும்.
முதுகில் விழுந்தால் கவலை, துன்பம் ஏற்படும். தொடையில் விழுந்தால் பெற்றோர், வயதானவர்களுக்கு தீங்கு ஏற்படும். இடது முழங்காலில் விழுந்தால், சுகம்.
வலதுப் பக்கம் விழுந்தால் பிரயாணம் மேற்கொள்வீர்கள். வலது பாதப் பகுதியில் விழுந்தால் நோய் ஏற்படும். இடது பகுதியில் விழுந்தால் துக்கம்.
இவ்வாறு பல்லி உங்கள் உடலில் எந்தப் பாகத்தில் விழுகிறது என்பதைக் கொண்டு பலன்கள் கூறப்படுகிறது.