இந்தக் கனவு கண்டீர்களா? ரொம்ப ஆபத்தாம்

இந்தக் கனவு கண்டீர்களா? ரொம்ப ஆபத்தாம்

நாம் காணும் ஒவ்வொரு கனவுக்குப் பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், கெட்ட சகுனங்களை முன்னறிவிக்கும் சில கனவுகள் குறித்து பார்ப்போம்.

மரம் விழுவது போன்ற கனவு

மரம் விழுவது போன்ற கனவு கண்டால், விரைவில் நாம் பெரிய பிரச்சினையை சந்திக்க நேரிடும். இதுபோன்ற கனவுகள் மோசமானதாகவும் தொந்தரவு தரக்கூடியதாகவும் இருக்கும். இவ்வாறு கனவு கண்டால் வாகனங்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

திருமணம்

திருமணம் செய்து கொள்வது போன்று கனவு வந்தால், கனவு கண்ட நபரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். துணையுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

எண்ணெய் தடவும் கனவு

எண்ணெய் தடவுவது போன்று கனவு கண்டால் அந் நபருக்கு உடல் நிலை தொடர்பில் மோசமான விளைவுகள் ஏற்படும். இதுபோன்ற சொப்பனங்கள் வரும் பட்சத்தில் விநாயகர் கோயிலுக்கு சென்று நெய் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

Share This