போதைப்பொருள் கடத்தலை தடுக்க நெடுஞ்சாலைகளில் சிசிரி கமாராக்கள், விரைவில் ஏற்பாடு

இலங்கை முழுவதிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு கமாராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில், வரவுள்ள 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு கமாராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவின் பிரகாரம் பொலிஸ் தலைமையகத்துடன் இணைந்து இந்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்பு பெறப்படும் என்றும் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணங்களில் பாதுகாப்பு கமாராக்கள் பொருத்தப்படும் என்றும் பின்னர் ஏனைய மாகாண நெடுஞ்சாலைகளிலும் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படும் எனவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே கமாரக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கொழும்பில் உள்ள அனைத்து பிரதான வீதிகளிலும் பாதுகாப்பு கமாராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் கம்பஹா? களுத்துறை மாவட்ட நெடுஞ்சாலைகள் அதனுடன் இணைந்துள்ள பிரதான வீதிகளிலும் கமாராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

