உலகம் Archives - Oruvan.com

ஈரான் – அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும் அறிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள கப்பல்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எண்ணெய் ஏற்றுமதியை மீட்டெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஹோர்முஸ் நீரிணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீளவும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலையில் ஒப்பந்தம் எட்டப்பட்டதை உறுதி செய்திருந்தார்.

இந்த ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஒப்பந்தத்தின் துல்லியமான நிபந்தனைகள் வெளியாகவில்லை.

எனினும், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நேர வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் நான் வீதம் சரிந்த, அதே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் 4.6 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது.

இதேவேளை, ஈரான் தனது அணுசக்தித் திட்டம் தொடர்பாக தெளிவான நடவடிக்கைகளை எடுத்தால், அதன் மீதான தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக நான்கு ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது என இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோக்கத்திற்காக அமெரிக்கா, ஈரான் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

மேலும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாடின்றி திறக்கக் கோருவதோடு, லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஈரான் – அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு appeared first on Oruvan.com.

பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு
பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் அதிகாரிகள், திங்கள்கிழமை அதிகாலையில் சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, உள்ளூர் நேரப்படி காலை 7:40 மணிக்குச் சற்று முன்னதாக மின்டானோ தீவுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து உடன் வெளியேறுமாறும், கடற்கரைகள் மற்றும் துறைமுகங்களிலிருந்து விலகிச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த நிலநடுக்கத்தை 7.3 ரிக்டர் அளவில் இருக்கும் என ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் மதிப்பிட்டிருந்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தெற்கு பிலிப்பைன்ஸின் சில மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுமாறு வலிறுயுத்தப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம், அந்நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

அதேபோல், ஜப்பானும் தனது பசிபிக் கடற்கரையின் பெரும் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு appeared first on Oruvan.com.

உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து – எமனாகும் வெப்பநிலை உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் சபை (United Nations) வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை மாற்ற தொர்பான அண்மைய அறிக்கை, உலகம் ஒரு முக்கியமான மற்றும் அபாயகரமான காலநிலை கட்டத்திற்குள் நுழைந்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

அறிக்கையின் படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக வெப்பநிலை இதுவரை பதிவான வரலாற்று அளவுகளை விட அதிகமாக உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, மனித நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டது எனக் கூறியுள்ள ஐ.நா., காலநிலை மாற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தை சமநிலைப்படுத்தும் இயற்கை அமைப்புகளின் திறனை விட காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலை மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது.

ஐ.நாவின் அறிக்கையின் பிரகாரம் உலக வெப்பநிலை தற்காலிகமாக 1.5°C வரம்பை மீறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (Paris Climate Agreement) இலக்குகளுக்கு நேரடி சவாலாகக் கருதப்படுகிறது.

கடுமையான வெப்ப அலைகள் அதிகரிக்கும் எனவும், குறிப்பாக நகர்ப்புறங்களில் வெப்பத் தாக்கம் (urban heat island effect) அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், கடல்மட்ட உயர்வு தொடர்ச்சியாக அதிகரிக்கும் நிலையில், குறைந்த உயரம் கொண்டத் தீவுகள் மற்றும் கடற்கரை நகரங்கள் பெரும் அபாயத்தை சந்திக்கும் எனவும் உணவு பாதுகாப்பு, நீர் வளங்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அழுத்தத்திற்கு உள்ளாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக வெப்பநிலை உயர்வின் அடிப்படை காரணிகள்

உலகளாவிய ரீதியில் வெப்பநிலை உயர்வின் பின்னணியில் பல மனிதச் செயல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முதலாவதாக, எரிசக்தி உற்பத்தியில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களின் அதிகப் பயன்பாடு வளிமண்டலத்தில் அதிக அளவிலான கார்பன் டைஆக்சைடை சேர்க்கிறது. இது பசுமை இல்ல விளைவை (greenhouse effect)  அதிகரிக்கிறது.

இரண்டாவதாக, உலகளாவிய தொழிற்துறை வளர்ச்சி, குறிப்பாக உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள், மிகப்பெரிய அளவில் கார்பன் வெளியீட்டை உருவாக்குகின்றன.

மூன்றாவதாக, காடுகள் அழிப்பு (deforestation) காரணமாக கார்பனை உறிஞ்சும் இயற்கை சமநிலை குறைகிறது. இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகமாக தங்குகிறது.

மேலும், வேகமான நகரமயமாக்கல், வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் அனைத்தும் இணைந்து இந்தப் பிரச்சினையை தீவிரப்படுத்துகின்றன.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை எந்தவொரு நாடும் முறையாக பின்பற்றுவதில்லை. முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய அமெரிக்காவே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டது.

விளைவுகளின் பல்முக தாக்கங்கள்

உலக வெப்பநிலை உயர்வு பனிமலை உருகுதல் வேகத்தை அதிகரிக்கிறது. இதன் நேரடி விளைவாக கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் மெதுவாக நீரில் மூழ்கும் அபாயம் உருவாகிறது.

அதேபோல், உயிரினங்களின் வாழிடங்கள் அழிந்துடன், தற்போதைய சூழவில் பல இனங்கள் அழிவின் ஆபத்தில் உள்ளன. கடல் சூழல் அமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

பொருளாதார தாக்கங்கள்

விவசாயம் இந்த மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் துறையாகும். பருவமழை மாற்றம் காரணமாக உணவு உற்பத்தி குறையும், இதனால் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் என்பதுடன், கடுமையான உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும்.

அத்துடன், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் அரசுகளுக்குப் பெரும் நிதிச் சுமையை உருவாக்கும். காப்பீட்டு துறை மற்றும் கட்டமைப்புத் துறைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

சமூக தாக்கங்கள்

வெப்பநிலை அதிகரிப்பால் மனித வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். குடிநீர் பற்றாக்குறை, வெப்ப அலை காரணமாக உயிரிழப்பு அபாயம், மற்றும் புதிய நோய்கள் பரவல் அதிகரிக்கக்கூடும். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் இடம்பெயர்வு (climate migration) அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

பிராந்திய ரீதியான உலக விளைவுகள்

உலகின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கப்படுகின்றன. ஐரோப்பா கடுமையான வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ சம்பவங்களை எதிர்கொள்கிறது. வட அமெரிக்கா சூறாவளி மற்றும் புயல் தாக்கங்களை அதிகமாக சந்திக்கிறது. ஆப்பிரிக்கா கடுமையான வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

லத்தீன் அமெரிக்காவில் காடுகள் அழிவு மற்றும் உயிரியல் பல்வகைமை குறைவு அதிகரிக்கிறது. ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் வெள்ளம், சூறாவளி மற்றும் மக்கள் இடம்பெயர்வு போன்ற சிக்கல்களை அதிகமாக எதிர்கொள்கின்றன.

தீர்வுகள் மற்றும் சர்வதேச கொள்கை நடவடிக்கைகள்

இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த பலத் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முதன்மையாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) பயன்பாட்டை உலகளவில் விரிவுபடுத்த வேண்டும். சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் முக்கிய மாற்று வழிகளாக கருதப்படுகின்றன.

கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த கடுமையானச் சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் தேவைப்படுகிறது. UNFCCC மற்றும் IPCC போன்ற அமைப்புகள் இதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. காடுகள் பாதுகாப்பு மற்றும் மீண்டும் காடு வளர்ப்பு (reforestation) நடவடிக்கைகள் மிக முக்கியமானதாகும்.

பாரிஸ் பருவளை ஒப்பந்தத்தில் இந்த விடயங்கள்தான் அதிகமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. என்றாலும், அந்நிய முதலீடுகள் மற்றும் வர்த்தகம், தொழில் வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் முட்டுக்கட்டையாக அமைவதாக பல நாடுகள் அதில் இருந்து வெளியேறியுள்ளன.

பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரகாரம் எந்தவொரு நாடும் செயல்படவில்லை என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிருந்தார்.

என்றாலும், பல ஐரோப்பிய நாடுகள் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் பிரகாரம் இன்னமும் தமது செயல்பாடுகளை முன்னெடுப்பதுடன், தமது இலக்குகள் குறித்தும் அறிவிப்புகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.

தெற்காசிய நாடுகள் உலகளவில் காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும்.

இந்தியாவில், வெப்ப அலைகள் அதிகரித்து மனித உயிரிழப்பு அபாயம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. பருவமழை மாறுபாடு இந்தியாவில் விவசாய உற்பத்தியை நேரடியாக பாதிப்பதுடன்,  நகரங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மின்சார தொடர்பானப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

இலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகள் அதிக அபாயத்தில் உள்ளன. தேயிலை உற்பத்தி மற்றும் விவசாயம் வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மண்சரிவு, வெள்ளம் உட்பட பல இயற்கை அனர்த்தங்கள் மலையகப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன. கடல் மட்ட உயர்வு காரணமாக கடற்கரை சமூகங்கள் இடம்பெயர வேண்டிய நிலை உருவாகலாம் என இலங்கை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றமானது இந்தியா மற்றும் இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக நிலைத்தன்மைக்கும் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

எனவே, ஐ.நா. வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, உலகம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. காலநிலை மாற்றம் இனி எதிர்கால அபாயமல்ல  அது தற்போதைய நிஜம்.

காலநிலை மாற்றம் தொடர்பில் உலக நாடுகள் உடனடி, ஒருங்கிணைந்த மற்றும் அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் உலகம் வரலாற்றில் இல்லாத அளவிலான காலநிலை நெருக்கடியை சந்திக்கும் அபாயம் உள்ளது.

சு.நிசாந்தன்

The post உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து – எமனாகும் வெப்பநிலை  உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை  appeared first on Oruvan.com.

“மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு”
மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிபொருள் சந்தையில் கடும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய இராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 புள்ளி 75 சதவீதம் அதிகரித்து, 97 புள்ளி 8 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை பகுதியைச் சுற்றி பதற்றம் அதிகரித்துள்ளதால், உலக சந்தைகளில் எரிபொருள் விநியோக தடைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

இந்த பதற்ற நிலைமை நீடித்தால், உலகளவில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே, அமெரிக்காவும் ஈரானும் அண்மையில் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகி வந்த நிலையில், இரு தரப்புகளுக்கும் இடையே மீண்டும் மோதல் சூழல் உருவாகியுள்ளது.

பந்தர் அப்பாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

எந்த நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்கள் குறிவைக்கப்பட்டன என்பது தெளிவாக வெளியிடப்படாதபோதிலும், ஈரானால் ஏவப்பட்ட சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தங்களது பாதுகாப்புப் படைகள் முறியடித்ததாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பு நிலையை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக பங்குச் சந்தைகளிலும் இந்த பதற்றத்தின் தாக்கம் பிரதிபலித்துள்ளது. பல நாடுகளில் விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் ஆற்றல் துறைகளில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கு பதற்றம் மேலும் தீவிரமடையாமல் இருக்க உடனடி இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையும் பல உலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

The post “மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு” appeared first on Oruvan.com.

பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது
உலகில் இன்னும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் பழைமையான ஆட்சிமுறைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது பிரித்தானிய முடியாட்சியாகும். இன்று மூன்றாம் சார்ள்ஸ் (Charles III) தலைமையில் இயங்கும் இந்த முடியாட்சி, வெறும் ஓர் அரச குடும்பத்தின் வரலாறு மட்டுமல்ல. அது இங்கிலாந்தின் அரசியல், சட்டம், பேரரசு, மதம் மற்றும் ஜனநாயக வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்புடையதாகும்.

பிரித்தானிய முடியாட்சி உண்மையில் எப்போது ஆரம்பமானது?

பண்டைய காலம் தொட்டு பிரித்தானிய முடியாட்சி பல கட்டங்களாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இன்றைய ஒன்றுபட்ட பிரித்தானியா உருவாகும் முன்பு பிரிட்டிஷ் தீவுகள் பல சிறிய இராச்சியங்களாகப் பிரிந்திருந்தன.

Wessex, Mercia, Northumbria, East Anglia போன்ற இராச்சியங்கள் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக வலுவானவையாக இருந்தன. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் Viking படையெடுப்புகள் தீவிரமடைந்தபோது, இந்தச் சிறிய இராச்சியங்கள் உயிர்வாழ்வதற்காக ஒன்றிணைய வேண்டிய சூழல் உருவானது.

9ஆம் நூற்றாண்டில் Viking படையெடுப்புகள் அதிகரித்தபோது, Wessex இராச்சியத்தின் மன்னராக இருந்த Alfred the Great மிக முக்கியமான தலைவராக உருவெடுத்தார்.

Viking படைகளுக்கு எதிராக போராடிய அவர், ஆங்கிலப் பகுதிகளை ஒன்றிணைக்கத் தொடங்கினார். அதற்காக “King of the Anglo-Saxons” என்ற அடையாளத்தை அவர் உருவாக்கினார் என பிரித்தானிய வரலாறு தெரிவிக்கிறது.

Æthelstan என்பவரே “முழுமையான இங்கிலாந்தின் முதல் மன்னர்” என்று வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 927ஆம் ஆண்டில் பல Anglo-Saxon பகுதிகளை ஒருங்கிணைத்து மைய ஆட்சியை உருவாக்கியதால், இங்கிலாந்து முடியாட்சியின் ஆரம்பம் அங்கிருந்தே தொடங்குகிறது என கருதப்படுகிறது.

இதனால் “பிரித்தானிய முடியாட்சி 1000 ஆண்டுகளுக்கும் மேலானது” என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், பிரித்தானிய முடியாட்சி வரலாற்றில் 1066 மிக முக்கியமான ஆண்டாகும்.

முடியாட்சிக்கான முதல் முக்கிய படியாக அமைந்தது

இந்த ஆண்டில் William the Conqueror நோர்மண்டியிலிருந்து இங்கிலாந்தை கைப்பற்றினார். இது “Norman Conquest” என அழைக்கப்படுகிறது. இந்த வெற்றிக்குப் பின்னர் மன்னராட்சி மிகவும் மையப்படுத்தப்பட்டதுடன், நில அமைப்பும் (feudal system) மாற்றப்பட்டது. பிரெஞ்சுக் கலாசாரம் மற்றும் மொழி ஆகியன அரசவையில் ஆதிக்கம் செலுத்தியதுடன், ஆட்சித் திட்டமும் நவீனமயமாகியது.

இன்றைய பிரித்தானிய அரச குடும்பத்தின் அரசியல் அமைப்பு பல வகையில் 1066 க்குப் பிந்தைய காலத்திலிருந்தே உருவாகத் தொடங்கியது என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1215ஆம் ஆண்டு மன்னர் ஜோன் (King John) மக்னா கார்ட்டா (Magna Carta) என்ற முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இது மன்னரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியதுடன், சட்டத்தின் மேலாதிக்கத்தை உருவாக்கியது. அத்துடன், பாராளுமன்ற வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது. இதுவே பின்னர் அரசியலமைப்பு முடியாட்சிக்கான முதல் முக்கிய படியாகவும் அமைந்தது.

தனிமனித சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிய நவீன ஜனநாயகத்தின் அடிப்படை மைல்கல்லாக மக்னா கார்ட்டா ஒப்பந்தம் கருதப்படுகிறது.

17ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகள் ஏற்பட்டிருந்தன. முதலாம் சார்ள்ஸ் மன்னர் (Charles I) மற்றும் பாராளுமன்றத்திற்கிடையிலான மோதல் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது.

இதன் எதிரொலியாக 1649ஆம் ஆண்டு முதலாம் சார்ள்ஸ் மன்னருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், முடியாட்சியும் தற்காலிகமாக நீக்கப்பட்டு ஓலிவர் க்ரோம்வெல் (Oliver Cromwell) தலைமையில் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டமை பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றமாகும். என்றாலும், 1660ஆம் ஆண்டு முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டது.

அதன்பின் மன்னரின் அதிகாரம் குறைக்கப்பட்டதுடன், பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டு அரசியலமைப்பு ரீதியாக முடியாட்சி உருவாகத் தொடங்கியது. 1688ஆம் ஆண்டு நடந்த “Glorious Revolution” மற்றும் 1689 Bill of Rights (உரிமைகள் சட்டமூலம்) மூலம் மன்னர் முழுமையான அதிகாரம் கொண்ட ஆட்சியாளர் அல்ல, என்பது சட்ட ரீதியாக உறுதிசெய்யப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகால அரசியல் பரிணாமத்தின் விளைவாகும்

தனி இராச்சியங்களாக இருந்த இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் 1707 இல் Acts of Union (ஒன்றியச் சட்டங்கள்) மூலம் இணைக்கப்பட்டு Kingdom of Great Britain (பெரிய பிரிட்டன் இராச்சியம்) உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் “British Monarchy” (பிரிட்டிஷ் முடியாட்சி) என்ற அதிகாரப்பூர்வ அடையாளம் உருவானது. இதன் முதல் அரசியாக Anne (ஆன்) தெரிவானார். 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் பேரரசு (British Empire) உலகின் மிகப்பெரிய பேரரசாக வளர்ந்தது.

விக்டோரியா மகாராணியின் (Queen Victoria) ஆட்சிக்காலத்தில் இந்தியா, ஆபிரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா உட்பட உலகின் பல பகுதிகளில் பிரித்தானியப் பேரரசின் ஆட்சி விரிவடைந்தது.

பின்னர் காலனித்துவத்துக்கு எதிராக உலகம் முழுவதும் எழுச்சியடைந்த சுதந்திரப் போராட்டங்கள் காரணமாக கொலனித்துவத்திலிருந்த பல நாடுகள் சுயாட்சி நாடுகளாக உருவாகின.

இன்றுள்ள பிரித்தானிய முடியாட்சி மிகவும் அடையாளப்பூர்வமானது மட்டுமே!. பாராளுமன்ற ஜனநாயகத்துடன் இணைந்ததுடன், அரசியலமைப்பின் கீழ் இயங்கி வருகிறது. அரசாங்கமே நடைமுறை அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மன்னராட்சி வெறும் சம்பிரதாயத்துக்காகவே பாதுகாக்கப்படுகிறது. என்றாலும், பிரித்தானியாவில் மன்னர்களுக்கு மிகப் பெரிய கௌரவம் இன்றும் உள்ளது.

பிரித்தானிய முடியாட்சி ஒரே நாளில் உருவான அமைப்பு அல்ல. அது Anglo-Saxon இராச்சியங்களிலிருந்து, Norman ஆட்சியிலிருந்து, பாராளுமன்றப் போராட்டங்களிலிருந்து, பேரரசு விரிவாக்கங்களிலிருந்து மெல்ல மெல்ல உருவான ஆயிரம் ஆண்டுகால அரசியல் பரிணாமத்தின் விளைவாகும்.

சில வரலாற்றாசிரியர்கள் கி.பி. 927ஆம் ஆண்டை அதன் தொடக்கமாகக் குறிப்பிடுகின்றனர். மற்றவர்கள் 1066 Norman Conquest-ஐ முக்கிய திருப்புமுனையாகக் கருதுகின்றனர். என்றாலும், அதிகாரப்பூர்வ “British Monarchy” (பிரித்தானிய பேரரசு) 1707ஆம் ஆண்டு தான் உருவானது என்பதே வரலாற்று உண்மையாகும்.

சு.நிசாந்தன்

The post பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது appeared first on Oruvan.com.

வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்’: ஜனாதிபதி கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்
வட​கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடு​கள் மீது தானாகவே அணு ஆயுத தாக்​குதல் நடத்​தப்​படும் என்று அந்த நாடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இது வடகொரி​யா​வின் ‘டெட் ஹேண்ட்’ என்​றழைக்​கப்​படு​கிறது.

கடந்த 1980-களில் சோவி​யத் யூனியன் (ரஷ்​யா) ‘டெட் ஹேண்ட்’ என்ற அணு ஆயுத கட்​டளை அமைப்பை உரு​வாக்​கியது.

எதிரி நாடுகளின் அணு ஆயுத தாக்​குதலால் ரஷ்யா அழிந்​து, அதன் தலை​வர்​கள் உயி​ரிழந்​தால் ‘டெட் ஹேண்ட்’ தானாக செயல்​பட்டு எதிரி நாடு​கள் மீது அணு ஆயுத தாக்​குதல்​களை நடத்​தும்.

இந்த ‘டெட் ஹேண்ட்’ அணு ஆயுத கட்​டளை அமைப்பை தற்​போதைய ரஷ்ய அரசு நவீன தொழில்​நுட்​பத்​துடன் புதுப்​பித்து வைத்​திருக்​கிறது. இதே பாணி​யில் வடகொரி​யா​வும் ‘டெட் ஹேண்ட்’ அமைப்பை உரு​வாக்கி உள்​ளது.

இதுகுறித்து சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது:

வடகொரி​யா​வின் அரசமைப்​புச் சட்​டத்​தில் திருத்​தங்​கள் செய்​யப்​பட்டுள்​ளன. இதன்​படி பாது​காப்பு சார்ந்த சட்​டங்​களி​லும் பல்​வேறு திருத்​தங்​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. குறிப்​பாக ரஷ்​யாவை பின்​பற்றி வடகொரி​யாவிலும் ‘டெட் ஹேண்ட்’ அணு ஆயுத கட்​டளை அமைப்பு உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது.

எதிரி நாடு​களின் தாக்​குதலில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால் ‘டெட் ஹேண்ட்’ அமைப்பு தானாக செயல்​பட்டு, எதிரி நாடு​களின் மீது அணு ஆயுத தாக்​குதல்​கள் நடத்​தப்​படும்.

அமெரிக்​கா, ஈரான் போர், வெனிசூலா ஜனாதிபதி நிக்​கோலஸ் மதுரோ சிறைபிடிக்​கப்​பட்​டது ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டு ‘டெட் ஹேண்ட்’ அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டிருப்​ப​தாக வடகொரியா விளக்​கம் அளித்​திருக்​கிறது. இது மிக​வும் ஆபத்தானது.

ஒரு​வேளை ஜனாதிபதி கிம் ஜாங் உன்​னின் உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டால் ‘டெட் ஹேண்ட்’ அமைப்​பால் தென்​கொரி​யா​வுக்கு மிகப்​பெரிய அளவில் பாதிப்பு ஏற்​படும். வடகொரி​யா​வின் அணு ஆயுதங்​களை சுமந்து செல்​லும் ஹ்வா​சாங் ரக ஏவு​கணை​கள் சுமார் 15,000 கிமீ. தொலைவு சீறிப் பாயக்​கூடியவை என்று கூறப்​படு​கிறது. இதனால் வெகுதொலை​வில் உள்ள அமெரிக்​கா​வின் பாது​காப்​புக்​கும் அச்​சுறுத்​தல் ஏற்​படும். இவ்​வாறு சர்​வ​தேச பாது​காப்​பு நிபுணர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

The post வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்’: ஜனாதிபதி கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல் appeared first on Oruvan.com.

“தைவானால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” – ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி எச்சரிக்கை
சீனா – அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விடயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் அவரை, சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங் வரவேற்றார்.

இதையடுத்து, ஜி ஜின்பிங்கை, டொனால்ட் ட்ரம்ப் இன்று சந்தித்தார்.

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜி ஜின்பிங் தெரிவித்த கருத்துக்கள் குறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், “டொனால்ட் ட்ரம்ப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தைவான் ஜலசந்தியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பதே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மிகப் பெரிய பொதுவான காரணியாகும் என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

சீன – அமெரிக்க உறவுகளில் தைவான் பிரச்சினை மிக முக்கியமான விடயம் என்று குறிப்பிட்ட ஜி ஜின்பிங், அது சரியாகக் கையாளப்பட்டால் இரு தரப்பு உறவு ஸ்திரத்தன்மையை அனுபவிக்கும் என அவர் கூறினார்.

இல்லாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்றும் ஜி ஜின்பிங் கூறினார். மேலும், தைவான் சுதந்திரமும் தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

சீன – அமெரிக்க பொருளாதார உறவுகள் பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடியவை இரு தரப்புக்கும் வெற்றியைத் தரக்கூடியவை எனத் தெரிவித்த ஜி ஜின் பிங், இரு நாட்டு வர்த்தக குழுக்களிடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தில், சமநிலையான, சாதகமான முடிவுகள் எட்டப்பட்டிருப்பது இரு நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் நல்ல செய்தி என கூறினார்.

வர்த்தக போர்களில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதை கடந்த கால சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன என தெரிவித்த ஜின்பிங், கருத்து வேறுபாடுகளும் உராய்வுகளும் இருக்கும் இடங்களில் சமமான ஆலோசனை மட்டுமே சரியான தேர்வாக இருக்கும் என்றார்.

நாம் கடினமாக உழைத்து உருவாக்கியுள்ள இந்த நல்ல உறவை; உத்வேகத்தை இரு தரப்பினரும் கூட்டாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “தைவானால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” – ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி எச்சரிக்கை appeared first on Oruvan.com.

அமெரிக்கா, ஸ்பெயின் மோதல் – நேட்டோ கூட்டணிக்குள் பிளவு ; ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படுமா?
உலக அரசியலில் கடந்த சில மாதங்களாக பெரும் கவனத்தை ஈர்த்து வரும் விவகாரங்களில் ஒன்றாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் இடையிலான பாதுகாப்பு மற்றும் அரசியல் மோதல் மாறியுள்ளது.

ஒருகாலத்தில் நெருக்கமான நட்பு நாடுகளாக கருதப்பட்ட இந்த இரண்டு நாடுகளுக்கிடையே தற்போது உருவாகியிருக்கும் பதற்றம், வட அட்லாண்டிக் பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோ  (NATO) அமைப்பின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

“ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படலாம்”, “அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை பரிசீலிக்கிறது”, “ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து விலக முயல்கிறது” போன்ற செய்திகள் உலக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புக் கூட்டணியாக உருவானது. இதன் அடிப்படை நோக்கம், சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கத்தை தடுக்க மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.

இந்தக் கூட்டணியின் மிக முக்கியமான விதியாக Article 5 கருதப்படுகிறது. அதன்படி, “ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதானத் தாக்குதலாகக் கருதப்படும்”. இந்தக் கொள்கை காரணமாகவே நேட்டோ உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியாக வளர்ந்தது.

அமெரிக்கா இந்தக் கூட்டணியின் முக்கிய நிதி ஆதார சக்தியாக உள்ளது. இராணுவத் தொழிநுட்பம், பாதுகாப்பு நிதி, அணு ஆயுத திறன் மற்றும் உலகளாவிய இராணுவத் தளங்கள் ஆகிய அனைத்திலும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.

ஸ்பெயின் 1982 ஆம் ஆண்டு நேட்டோவில் இணைந்தது. ஆரம்பத்தில் சில அரசியல் எதிர்ப்புகள் இருந்த போதிலும், பின்னர் அது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பில் முக்கிய உறுப்பினராக மாறியது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் இடையே உருவாகியுள்ள பாதுகாப்பு மற்றும் அரசியல் கருத்து மோதல், தற்போது நேட்டோ கூட்டணிக்குள் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ அமைப்பில் முக்கிய உறுப்பினராக உள்ள ஸ்பெயின், பாதுகாப்புச் செலவின உயர்வு மற்றும் மத்திய கிழக்கு இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகள் தங்களின் பாதுகாப்புச் செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை, நேட்டோவின் அனுமதி இன்றிய ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகள், அமெரிக்காவின் கடும் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

அத்துடன், நேட்டோ நாடுகள் தங்கள் GDP-இன் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காகச் செலவிட வேண்டும்,  அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் பாதுகாப்புச் சுமையை  மற்ற நாடுகளும் பகிர வேண்டும், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கப் பாதுகாப்பின் கீழ் ‘இலவசப் பயணம்’ செய்யக்கூடாது போன்ற டிரம்பின் கருத்துகள் ஐரோப்பிய நாடுகளின் கௌரவத்துக்கும் பாதிப்பாக உள்ளதால் இவ்வாறு கருத்து மோதல்கள் வலுப்பெற்றுள்ளன.

பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) தலைமையிலான ஸ்பெயின் அரசு, அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.  பொருளாதார அழுத்தங்கள், வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கானச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்புச் செலவை பெரிதும் உயர்த்துவது சாத்தியமற்றது என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் அரசியல் அமைப்பில் இடதுசாரி மற்றும் சமூகநலக் கொள்கைகளுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. கல்வி, சுகாதாரம், சமூக நலன் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்து ஸ்பெயினில் நீண்டகாலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக “அதிக இராணுவமயமாக்கல்” குறித்து மக்களிடையே கடும் எதிர்ப்புகள் உள்ளன.

நீண்டகாலமாக அமெரிக்கா – ஸ்பெயின் இடையில் இதுகுறித்து கருத்து மோதல்கள் இருந்துவந்தப் போதிலும், ஈரான் மீதான அமெரிக்காவின் தன்னிச்சயான தாக்குதல் இந்த மோதலை தீவிரப்படுத்தியதில் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவ முன்னெடுப்புகளை அதிகரித்தபோது, ஸ்பெயினில் அமைந்துள்ள அமெரிக்க – ஸ்பெயின் கூட்டு இராணுவத் தளங்களான Rota மற்றும் Morón தளங்களை முழுமையாகப் பயன்படுத்த அமெரிக்கா எதிர்பார்த்த போதிலும் அதற்கு ஸ்பெயின் மறுப்புத் தெரிவித்துவிட்டது.

இந்த நிலையிலேயே, ஸ்பெயினை நேட்டோவில் இருந்து இடைநிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், இது அதிகாரப்பூர்வ முடிவு அல்ல என்றும், நேட்டோ அமைப்பில் ஒரு உறுப்பு நாட்டை எளிதில் வெளியேற்றும் நடைமுறை இல்லை என்றும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போர், ரஷ்ய அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்காவின் மாறிவரும் வெளிநாட்டுக் கொள்கைகள் காரணமாக, ஐரோப்பா தனது பாதுகாப்புத் தன்னிறைவைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.

‘‘அமெரிக்கா – ஸ்பெயின் கருத்து மோதல் ஒரு சாதாரண இருதரப்புப் பிரச்சினை அல்ல. மாறாக மேற்கத்திய கூட்டணிக்குள் உருவாகும் புதிய அரசியல் பிளவுகளின் அறிகுறியாகும்‘‘ என உலக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான நேரடி அபாயம் இல்லாவிட்டாலும், இந்தப் பதற்றம் எதிர்காலத்தில் நேட்டோ கூட்டணியின் திசையை பாதிக்கக்கூடிய முக்கிய அரசியல் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

இந்த மோதல் போக்கின் எதிரொலியாக ஐரோப்பாவில் புதிய பாதுகாப்பு மற்றும் இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட வேண்டுமா என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

நேட்டோ கூட்டணி இன்னும் ஐரோப்பாவின் முக்கிய பாதுகாப்பு அமைப்பாக இருந்தாலும், தற்போதைய அரசியல் போக்கானது ஐரோப்பா தனது பாதுகாப்புத் தன்னிறைவை அதிகரிக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

“ஐரோப்பாவுக்கு தனித்துவமான பாதுகாப்பு சுயாதீனம் அவசியம்” என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.  ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் என ஐரோப்பாவின் மூன்று முக்கிய நாடுகள் இந்த விடயத்தில் கைகோர்த்து உள்ளமையால் நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கான புதிய இராணுவக் கூட்டணி குறித்த பேச்சுகள் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

உலக அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பாவில் உருவாகும் இந்த புதிய பாதுகாப்புச் சிந்தனை, எதிர்கால உலக அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

சு.நிசாந்தன்

The post அமெரிக்கா, ஸ்பெயின் மோதல் – நேட்டோ கூட்டணிக்குள் பிளவு ; ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படுமா? appeared first on Oruvan.com.

மீண்டும் நிலவுக்கு மனிதன்: வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II பயணம்
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதன் மீண்டும் நிலவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளான். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ‘ஆர்டெமிஸ் II’ (Artemis II) விண்கலம், நான்கு விண்வெளி வீரர்களுடன் நிலவைச் சுற்றி வந்து வெற்றிகரமாகத் திரும்பியுள்ளது. இது தொடர்பான சில முக்கிய தகவல்கள் இதோ:

பயணத்தின் தொடக்கம்: கடந்த ஏப்ரல் 1, 2026 அன்று, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ‘எஸ்.எல்.எஸ்’ (SLS) எனும் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. இது கிளம்பும் போது வெளிப்படுத்திய நெருப்பும் வேகமும் பார்ப்போரைக் பிரமிக்க வைத்தது.

நிலவின் காட்சி: நிலவுக்கு மிக அருகில் சென்ற வீரர்கள், அங்கிருந்து நமது பூமி ஒரு சிறிய நீல நிறப் பந்து போலத் தெரிவதைக் கண்டு வியந்தனர். நிலவின் இருண்ட பகுதிக்கு அப்பால் சுமார் 4,700 மைல்கள் வரை சென்று, மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து மிக நீண்ட தூரம் சென்ற வீரர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

அபூர்வ சூரிய கிரகணம்: விண்வெளியில் வீரர்கள் இருந்தபோது, நிலவு சூரியனை மறைக்கும் ஒரு அபூர்வ சூரிய கிரகணத்தைக் கண்டனர். பூமியில் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த கிரகணம், விண்வெளியில் அவர்களுக்கு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

பாதுகாப்பான திரும்புதல்: நிலவைச் சுற்றி வந்த பிறகு, அந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் மணிக்கு 24,000 மைல் வேகத்தில் நுழைந்தது. அப்போது விண்கலத்தின் வெளிப்பகுதி சுமார் 5,000°F வெப்பமடைந்தது. இருப்பினும், அதன் பாதுகாப்பு கவசம் வீரர்களைக் காப்பாற்றியது. இறுதியாக, மூன்று பிரம்மாண்டமான பாராசூட்டுகள் உதவியுடன் சான் டியேகோ கடல் பகுதியில் விண்கலம் மெதுவாக வந்து இறங்கியது.

இந்த வெற்றியானது, விரைவில் மனிதர்களை மீண்டும் நிலவில் தரை இறங்கச் செய்வதற்கும் (ஆர்டெமிஸ் III மற்றும் IV திட்டங்கள்), எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கும் ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது. விண்வெளி வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும்.

The post மீண்டும் நிலவுக்கு மனிதன்: வரலாற்று சாதனை படைத்த ஆர்டெமிஸ் II பயணம் appeared first on Oruvan.com.

வடக்கு லண்டனின் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் – சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலை
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

45 வயதான குறித்த சந்தேகநபர் மீது இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் காவல்துறை அறிவித்துள்ளனர்.

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன்  ஹைஃபீல்ட் அவென்யூவில் கடந்த புதன்கிழமை நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு யூதர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்.

இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் சோமாலியாவில் பிறந்த பிரித்தானிய குடிமகளான ஈசா சுலைமான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், கிரேட் டோவர் தெருவில் குறித்த திகதியில் நடந்த மற்றொரு சம்பவம் தொடர்பாகவும், சுலைமான் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு பயங்கரவாதச் சம்பவம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், பயங்கரவாத எதிர்ப்புப் காவல்துறை தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சுலைமான் என்ற சந்தேகநபரை இன்று பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

The post வடக்கு லண்டனின் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் – சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலை appeared first on Oruvan.com.