இலங்கை Archives - Oruvan.com

வித்தாயாவின் படுகொலையில் தாமதிக்கப்பட்ட நீதி எதைக் கூறுகிறது?
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இடம்பெற்ற சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை, இலங்கையின் வரலாற்றில் மிகுந்த அதிர்ச்சியூட்டிய குற்றச்சம்பவங்களில் ஒன்றாகும். இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் இல்லாமல், பெண்கள் பாதுகாப்பு, சட்டத்தின் செயல்திறன் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை மையப்படுத்திய தேசிய அளவிலான விவாதமாக மாறியது.

வித்தியாவின் வழக்கில் உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் நீண்ட வழக்குப் போராட்டத்திற்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் கிடைத்த ஒரு நியாயமான பதிலாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியிருந்தது.

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியான வித்தியா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் படி, சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

அந்த மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பை அறிவித்தது. வழக்கு விசாரணை இடம்பெற்ற நேரத்தில், சிறையில் உள்ள குற்றவாளிகள் ‘Zoom’ தொழிநுட்பம் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்<wbr />தனர்.

விசாரணையின் போது, குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் உயிரிழந்திருந்தமை மற்றும் ஏனைய சாட்சிகள், ஆதாரங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இரு பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை நிறைவில் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் உள்ளிட்ட மீதமுள்ள நான்கு பேருக்கு மேல் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் கிடைத்த இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கும், சமூக நீதிக்குமான ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இத்தீர்ப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் சட்ட நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என வித்தியாவின் படுகொலைக்கு நீதிகோரிப் போராடிய மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் இயங்கிவருகின்றன. பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை, குழந்தைகள் பாதுகாப்பு போன்ற துறைகளில் சட்ட அடித்தளம் பலமாக இருந்தாலும், நடைமுறைச் செயற்பாடுகள் பலவீனமாக இருப்பது பெரும் சிக்கலாக உள்ளது.

பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு அளிக்க அச்சப்படுகின்றனர். சமூக அழுத்தம், அவமானம், பொலிஸ் செயல்முறை மீதான நம்பிக்கை குறைவு போன்ற காரணிகள் இதற்குக் காரணமாகின்றன. மேலும், வழக்குகள் நீண்ட காலம் நீடிப்பதும் நீதியைத் தாமதப்படுத்துகிறது.

பெண்கள் பாதுகாப்பு என்பதை சட்டங்களை உருவாக்குவதில் மட்டும் செய்ய முடியாது. குறித்த சட்டங்கள் செயல்படுத்தப்படுவது அவசியமாகும். பொலிஸ்துறை, நீதித்துறை, சமூக சேவை அமைப்புகள் மற்றும் கல்வி முறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இதற்காக பாலின உணர்வுப் (gender sensitivity) பயிற்சிகள், விரைவு நீதிமன்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மற்றும் சட்ட உதவி போன்ற பல நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இலங்கையின் குற்றவியல் நீதித்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் இருப்பது, சாட்சிகள் பாதுகாப்பின்மை, விசாரணை தரம் குறைவு மற்றும் நீதிமன்ற செயல்முறை மந்தம் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

அதன் காரணமாகத் தான் வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிக்கானத் தண்டனை உறுதிப்படுத்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலம் எடுத்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தாமதிக்கப்பட்ட நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். வித்தியா வழக்கில் இந்தத் தீர்ப்பானது உடனடியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இடம்பெற்றிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் சமூகத்தில் இடம்பெறுவது ஓரளவு குறைந்திருக்கும் எனவும் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை விரைவுபடுத்துதல், டிஜிட்டல் ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும் சட்ட மாற்றங்கள், சாட்சி பாதுகாப்புத் திட்டங்கள் ஆகிய சீர்திருத்தங்கள் இலங்கைக்கு அவசியம். அதன் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விரைவான நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்.

நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது ஒரு அரசாங்கத்துக்கு முக்கியமான சவாலாகும். நீதிமன்ற தீர்ப்புகள் தாமதமின்றி, வெளிப்படையாக வழங்கப்படும்போது மட்டுமே மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும். கடந்தகால அரசுகள் விட்ட தவறை தற்போதைய அரசும் விடக்கூடாது.

அதற்காகவே சமகால அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தை மக்கள் கையளித்திருந்தனர்.

இன்றைய உலகில் நீதியின் தரம் என்பது ஒரு நாட்டின் ஜனநாயகத் தரத்தை நிர்ணயிக்கும் முக்கிய அளவுகோலாக உள்ளது. எனவே, நீதித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நாட்டை மேலும் பலப்படுத்தும்.

நீதித்துறையை வலுப்படுத்துவதாகவே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. என்றாலும்,  நீதித்துறையின் செயல்பாடுகள் இன்னமும் தாமதாகவே உள்ளன. எனவே, வித்தியாவின் வழக்கை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கம் விரைவான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு தாமதமின்றி பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சுப்ரமணியம் நிசாந்தன்

The post வித்தாயாவின் படுகொலையில்  தாமதிக்கப்பட்ட நீதி எதைக் கூறுகிறது? appeared first on Oruvan.com.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புதிய வகை AI
தற்கால உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தப் பின்னணியில், ‘Claude Mythos’ போன்ற மிகவும் முன்னேற்றமடைந்த AI மென்பொருட்கள், நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளதாக பாதுகாப்புத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சாதாரணமாக ஒரு கணினி வலையமைப்பில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதற்கு மனிதர்களுக்குப் பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம். ஆனால், இந்த ‘Mythos’ போன்ற புதிய AI தொழில்நுட்பங்கள் மிகக் குறுகிய நேரத்தில், அதாவது சில நிமிடங்களிலேயே பாதுகாப்பு ஓட்டைகளைக் கண்டறிந்துவிடும். இதன் மூலம் எதிரிகள் நமது இராணுவத் தொடர்புகள், ரேடார் அமைப்புகள் மற்றும் தளவாட விநியோகங்களை முடக்கும் அபாயம் உள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகள் தமது டிஜிட்டல் கட்டமைப்பிற்கு அமெரிக்க மென்பொருட்களையும் (Software) மற்றும் சீன வன்பொருட்களையும் (Hardware) தான் அதிகம் நம்பியுள்ளன. இது ஒரு “ஆபத்தான கலவை” என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பிற நாடுகளின் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தும்போது, அவசர காலங்களில் நமது தகவல்களின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

தீர்வு என்ன? இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், பின்வரும் நான்கு விடயங்களைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது:

சொந்தத் தயாரிப்பு: வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருக்காமல், சொந்தமாகவே பாதுகாப்பு மென்பொருட்களை உருவாக்க வேண்டும்.

தொடர்ச்சியான கண்காணிப்பு: இராணுவக் கட்டமைப்பில் உள்ள மென்பொருட்களை AI மூலம் தொடர்ந்து பரிசோதித்து, ஓட்டைகளை உடனுக்குடன் அடைக்க வேண்டும்.

தாக்கும் திறன்: தற்காப்புடன் மட்டும் நின்றுவிடாமல், எதிரிகளின் இத்தகைய தாக்குதல்களை முறியடிக்கத் தேவையான முன்னேற்றமடைந்த AI தொழில்நுட்பத்தை வளர்க்க வேண்டும்.

வேகம்: எதிரிகள் தாக்குவதற்கு முன்பே அவர்களைக் கண்டறிந்து தடுக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், கத்திக்குக் கத்தி என்பது போல, எதிரிகளின் AI தாக்குதலைச் சமாளிக்க நாமும் நவீன AI தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

The post பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புதிய வகை AI appeared first on Oruvan.com.

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மறுசீரமைப்புக் குழுவின் முதல் இலக்கு, ‘இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, அதனுடன் புதிதாக முன்மொழியப்பட்ட யாப்பை செயல்படுத்துவதாகும்’ என அதன் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்றக் குழு பதவி விலகியதை அடுத்து விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இந்த மறுசீரமைப்புக் குழுவை நியமித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் அடங்கிய ஒன்பது பேர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹானாம, குமார் சங்கக்கார, சிதத் வெத்தமுனி ஆகியோருடன் துஷிர ரதல்ல, அவன்தி கலம்பனே, பிரகாஷ் ஷாப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் டினால் பிலிப் ஆகியோரும் அடங்குகின்றனர்.

இந்தக் குழுவில் பிரதான இரு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்தும் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறந்த நிர்வாகத்தை அமைத்தல் மற்றும் களத்தில் சிறந்த செயல்திறன் என்ற அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு பணிகள் விரைவாக இடம்பெறும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மறுசீரமைப்புகளின் பின்னர் விரைவாக இலங்கை கிரிக்கெட் அணி கடந்த காலத்தை போன்று சிறப்பான வெற்றிகளை பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம் appeared first on Oruvan.com.

பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் அந்தந்த பீடங்களின் மகாநாயக்க தேரர் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தச் சட்டம் முன்னரே இயற்றப்பட்டிருந்தாலும், தற்போது இது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த பௌத்த பிக்குகள் தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

The post பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் appeared first on Oruvan.com.

வலிகாமத்தில் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, குறித்த காணிகளின் உரிமையாளர்கள் இன்று  போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டமானது இன்று வலிகாமம் வடக்கு பகுதிகளில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருகின்றனர்.

அதன் பிரகாரம் தொழிலாளர் இன்றைய தினமும் போராட்டத்தை நடத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.

The post வலிகாமத்தில் மக்கள் போராட்டம் appeared first on Oruvan.com.

uber, pick me ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகையை வழங்க அரசாங்கம் ஆலோசனை
நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் விரிவான சமூகப் பாதுகாப்பு கொள்கையின் கீழ், ஊபர் (Uber) மற்றும் பிக்மி (PickMe) போன்ற செயலி வழிப் போக்குவரத்து மற்றும் விநியோக சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்தத் திட்டத்தின் ஊடாக, குறித்த பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் ஓய்வுக்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான சலுகைகளை வழங்கவும் தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவிக்கையில்,

செயலி வழிப் பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் முறையான ‘தொழில் வழங்குநர் – பணியாளர்’ (Employer-Employee relationship) உறவுநிலை சட்டரீதியாகத் தெளிவாக இல்லாதபோதும், அவர்களை ஒரு சமூகப் பாதுகாப்பு வலையமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

இவ்வாறான பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது உலகளாவிய ரீதியில் விவாதிக்கப்படும் ஒரு விடயமாகும்.

பொதுவாக ஒரு பணியில் சேரும்போது வழங்கப்படும் நியமனக் கடிதம், கடமைக்கு வரும் மற்றும் செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற காரணிகளைக் கொண்டே ஒரு பணி உறவு தீர்மானிக்கப்படுகிறது.

எனினும், செயலி வழிப் பணிகளில் இவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லாத சூழலிலும் இவர்களுக்கான உரிமைகளை வழங்க அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது.

இந்த வேலைத்திட்டத்தில் ஊபர் மற்றும் பிக்மி போன்ற நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அந்த நிறுவனங்களுடன் அமைச்சின் மட்டத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனங்களின் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள தரவுகளின்படி, குறித்த செயலிகளில் பணியாற்றுபவர்களில் 60 சதவீதமானோர் ஏனைய தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டே பகுதிநேரமாக இந்தப் பணிகளைச் செய்கின்றனர். எஞ்சிய 40 சதவீதமானோர் இதனை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

முழுநேரப் பணியாளர்களாக அடையாளம் காணப்படும் 40 சதவீதமானோரைத் தனியாக வகைப்படுத்தி, அவர்களை முறையான சமூகப் பாதுகாப்பு முறைமைக்குள் இணைக்க அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, முறையான தொழில் வழங்குநர் ஒருவரை அடையாளம் காண முடியாத சூழலிலும், இவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய (EPF) வசதிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.

The post uber, pick me ஓட்டுநர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிய சலுகையை வழங்க அரசாங்கம் ஆலோசனை appeared first on Oruvan.com.

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை – ஜனாதிபதி தலைமையில் முக்கிய தீர்மானம்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கடந்த டிட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன், நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அதன்படி, உயர் நீரேந்துப் பிரதேசங்களில் நிலவும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் எனத் தனியான அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் செயல்முறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான முன்மொழிவுகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

அந்த அனைத்து முன்மொழிவுகளையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இலங்கையின் உயர் நீரேந்துப் பிரதேசங்களின் சுற்றாடல் மறுசீரமைப்பு மற்றும் முகாமைத்துவம் ஆகிய பணிகள் இந்தப் புதிய அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படுவதுடன், தேசிய நீர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு, அனர்த்த அபாயக் குறைப்பு, பொருளாதார மற்றும் வலுசக்தி செயற்திறன், காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடைதல் மற்றும் அவற்றின் பாதிப்புகளைக் குறைத்தல், இயற்கை மூலதனக் கணக்கீடு ஆகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் வலுசக்தி அமைச்சின் செயலாளருமான ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், அரச அதிகாரிகள், சூழலியலாளர்கள், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுத் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை – ஜனாதிபதி தலைமையில் முக்கிய தீர்மானம் appeared first on Oruvan.com.

எரான் விக்ரமரத்ன தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலக் குழுவில் முன்னாள் நட்சத்திர வீரர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் நிர்வாகத் துறை நிபுணர்கள் எனப் பல்துறை சார்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்த இடைக்கால குழுவில் ரொஷான் மஹாநாம, குமார சங்கக்கார, சிதத் வெத்தமுனி, பிரகாஷ் ஷாஃப்டர், துஷிர ரதெல்ல, அவந்தி கொலம்பகே, உபுல் குமாரப்பெரும மற்றும் தினல் பிலிப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டாகப் பதவி விலகியது.

விளையாட்டுத்துறைச் சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகள் தற்காலிகமாக விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதன் பணிகளை முறையாகக் கொண்டு செல்லவும், தேவையான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும் எரான் விக்ரமரத்ன தலைமையிலான இந்த இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

The post எரான் விக்ரமரத்ன தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம் appeared first on Oruvan.com.

இலங்கை நபர் மீது தாக்குதல்: கடும் கண்டனம் – கடற்றொழில் அமைச்சர் கண்டனம்
இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை கடற்பரப்பிற்குள் அடிக்கடி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் குறித்து நீண்டகாலமாகவே இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்கள் அமைதியான முறையில் நடந்துகொண்டு, இந்திய மீனவர்களை “தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு அணுகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கடந்த காலங்களில் இலங்கை கடல் வளங்கள் பலமுறை சூறையாடப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் கடல் சூழலுக்கும் மீன்வள வளங்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனால், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்விடயங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய உயர் அதிகாரிகளுடனும், மீன்பிடி துறை அதிகாரிகளுடனும் பல கட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இணைந்த நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் விரைவான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருநாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் அனைத்தும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிதலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கை நபர் மீது தாக்குதல்: கடும் கண்டனம் – கடற்றொழில் அமைச்சர் கண்டனம் appeared first on Oruvan.com.

அர்ச்சுனா எம்.பிக்கு பிணை
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.

அதேவேளை அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், கடந்த 25ம் திகதி குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

அதனை அடுத்து, கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அர்ச்சுனாவை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து அர்ச்சுனா இராமநாதனை ஐந்து இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில், 20 ஆயிரம் ரூபா பெறுமதியான காசு பிணையிலும் செல்ல அனுமதித்த மன்று, எதிர் தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் போக கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.

அதேவேளை , அர்ச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்டார் என குற்றம் சாட்டப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் அவரும் மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

The post அர்ச்சுனா எம்.பிக்கு பிணை appeared first on Oruvan.com.