பாதசாரிகள் மீது மோதிய பேருந்து…மூன்று பேர் உயிரிழப்பு
மகாராஷ்ட்ரா மாநிலம், மும்பை, குர்லா பகுதியில் இருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தொன்று திடீரென பாதசாரிகள் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு 20 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் விபத்தில் சிக்குண்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.