பப்ளிக் வைஃபை பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கை அவசியம்
பொதுவான வைஃபை நெட்வர்க்குகள் பயன்படுத்துவது எப்பொழுதும் பாதுகாப்பற்றவையாக கருதப்படுகிறது.
இதன் மூலம் ஹேக்கர்கள் பயனர்களின் தகவல்களை எளிதாக ஹேக் செய்ய முடிகிறது.
இவற்றுள் கடவுச் சொற்கள், கிரடிட் அட்டை விபரங்கள் போன்றவற்றையும் எளிதாக திருட முடியும்.
அதனால் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் இதோ…
VPN
VPN அதாவது வெர்ச்சுவல் பிரைவட் நெர்வர்க்கை என்கிரிப்ட் செய்வதால் உங்கள் சாதனம் மற்றும் இன்டர்நெட் இடையே ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கும்.
சொப்ட்வேர் அப்டேட்
சொப்ட்வேர் அப்டேட் செய்வதனால் சாதனங்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்கும்.
இணைப்புகளை கண்காணித்தல்
எப்பொழுதும் நெட்வர்க் பெயர்களை வெரிஃபை செய்து கொள்ளுங்கள். ஃப்ரீ பை அல்லது பப்ளிக் நெட்வர்க் போன்ற பெயர்கள் கொண்ட நெட்வர்க்குகள் மூலம் உங்கள் சாதனத்தின் இணைப்பதை தவிர்க்கவும்.
ஃபைல் ஷேரிங்
பப்ளிக் வைஃபை பயன்படுத்தும்போது ஃபைல் ஷேரிங் போன்ற அம்சங்களை டிசபிள் செய்து விடுங்கள்.
முக்கிய தகவல்களை பயன்படுத்த வேண்டாம்
ஒன்லைன், பேங்கிங், ஷொப்பிங் ஆகியவற்றை செய்வதை தவிர்க்க வேண்டும்.
எனவே பப்ளிக் வைஃபை பயன்படுத்தும்போது இவ்வாறான பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த வேண்டும்.