ட்ரம்ப் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட செய்தி, பிபிசி பணிப்பாளர், நிறைவேற்று அதிகாரி பதவி விலகல்

பிரித்தானியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான பிபிசி செய்தி சேவையின் பணிப்பாளர் நாயகம் ரிம் டேவி மற்றும் செய்தி பிரிவு பிரதம நிறைவேற்று அதிகாரி டெபோரா டெர்னஸ் ஆகியோர் உடனடியாக பதவி விலகியுள்ளனர். டேவி கடந்த ஐந்து ஆண்டுகளாக பிபிசி செய்தி சேவையில் பணிபுரிந்தவர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்பாக திரிபுபடுத்தப்பட்ட செய்திகயைத வெளியிட்ட குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனால் இவர்கள் உடனடியாக பதவி வலிகியுள்ளனர்.
குறிப்பாக வழமையான காண்பிக்கப்படும் ஆவண காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நேயர்களுக்குத் தவறான தகவல்களை வழங்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு குற்றவாளி என்ற முறையில் தொகுத்து வெளியிட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இரண்டு வெவ்வேறு உரைகள் தொகுக்கப்பட்டு பிழையான முறையில் ட்ரம்ப் பற்றிய கருத்து நேயர்களிடம் திணிக்கப்பட்டிப்பதாக நிர்வாகம் கூறியுள்ளது.
உலக செய்தி சேவை நிறுவனமான பிபிசி ஊடக நிறுவனம், பக்க சார்பாக செய்திகளை வெளியிட்டது என குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது.
இந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக பிபிசி செய்தி சேவையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் செய்தி பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தங்களது பதவிகளை விட்டு விலகி உள்ளனர்.
தவறு நடந்தால் பதவி விலக வேண்டும். பிபிசி நேர்மையான செய்தி நிறுவனம். ஆகவே குறித்த ஆவணக் காட்சியில் தவறு இருந்தாக கூறப்பட்டதால், அதற்குரிய பொறுப்பை ஏற்று, பதவி விலகுவதாக ரிம் டேவி தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெப்பிடல் ஹில் பகுதியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாகவும், பிபிசி திரிபுபடுத்திய செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
