சங்காய் ஒத்துழைப்பு மாநாடு, இந்தியா – அசர்பைஜான் கருத்து மோதல்

சங்காய் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அசர்பைஜான் அரசு பங்கொள்வதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev) சீனாவின் தியான் ஜின் நகரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து உரையாடிய பின்னர் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாதாக பாகிஸ்தான் ரூடே என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட சிந்தூர் இராணுவ நடவடிக்கையை அசர்பைஜான் கண்டித்திருந்தது. அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கும் ஆதரவு வழங்கியிருந்தது.
இந்த நிலையில் அசர்பைஜான் அரசு இந்தியா மீது குற்றம் சுமத்துவதாகவும், சங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொள்ள இந்தியா எதிர்ப்பதாகவும் அசர்பைஜான் குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனால் இந்தியா எதிர்க்கவில்லை எனவும் அசர்பைஜான் அரசு, பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அவ்வாறு குற்றம் சுமத்துவதாகவும் புதுடில்லி ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இருந்தாலும், சங்காய் ஒத்துழைப்பு கூடடமைப்பில் முழு நேர உறுப்பு நாடாக தங்களை இணைய விடாமல் இந்தியா தடுப்பதாக அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் சீன ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி சங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இணைய விடாமலும், அதன் மாநாடுகளில் பங்குகொள்ளவதை தடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ், இந்த விடயம் தொடர்பாக சீனா அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
சிந்தூர் இராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டதாக அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் பாராட்டியிருந்தார். அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கு அசர்பைஜான் ஒத்தழைக்கும் எனவும் கூறியிருந்தார் என்றும் இதன் காரணமாகவே இந்தியா பழிவாங்குவதாகவும் இந்திய விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.