Nishanthan Subramaniyam, Author at Oruvan.com

புதிய அரசியலமைப்புக்கான தேவை இலங்கையில் உள்ளதா?
இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இந்த நீண்ட காலப் பயணத்தின் பின்னரும், நாட்டின் அரசியல் அமைப்பும் ஆட்சிமுறையும் எதிர்கொண்டுவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிலையானத் தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை.

அதிகாரத்தின் மையப்படுத்தல், ஜனநாயக நிறுவனங்களின் பலவீனம், இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை, சமூக அநீதி, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாத ஆட்சி ஆகியன தொடர்ந்தும் நாட்டை சவாலுக்கு உள்ளாக்கி வருகின்றன.

இலங்கையின் அரசியலமைப்புச் சரித்திரத்தைப் பார்த்தால், 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகள் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அவை மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளன.

Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT

குறிப்பாக 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை, அதிகாரங்களை ஒரே நபரிடம் குவித்து வைத்ததன் மூலம் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்தையும் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும் குறைத்தது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஆரம்பத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது அதிகாரத் துஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, ஊழல் மற்றும் அரசியல் பொறுப்பின்மைக்கு வழிவகுத்தது. கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இந்த விமர்சனங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

இந்தப் பின்னணியில்தான் 2022ஆம் ஆண்டு உருவான மக்கள் எழுச்சி இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டிய காலகட்டத்தில், இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து அரசியல் மாற்றத்திற்காக குரல் கொடுத்தனர்.

இது வெறும் எரிபொருள், மின்சாரம் அல்லது அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு எதிரானப் போராட்டமாக மட்டுமல்லாமல், பல தசாப்தங்களாக நிலவி வந்த அரசியல் கலாசாரத்திற்கெதிரான மக்கள் தீர்ப்பாகவும் அமைந்தது.

குறித்த போராட்டம் வெளிப்படுத்திய மிக முக்கியமான செய்தி, மக்கள் இனிமேல் அதிகாரத்தின் மையப்படுத்தலையும், குடும்ப ஆட்சியையும், ஊழலையும் ஏற்கத் தயாராக இல்லை என்பதாகும். அதிகாரம் மக்களிடமிருந்து உருவாகிறது. எனவே, அது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டை அந்தப் போராட்டம் மீண்டும் வலியுறுத்தியது.

இந்த மக்கள் எழுச்சியின் அரசியல் தாக்கம் 2024ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தல்களிலும் தெளிவாகப் பிரதிபலித்தது. பழைய அரசியல் நடைமுறைகளை நிராகரித்த வாக்காளர்கள், மாற்றத்திற்கான வாக்குறுதிகளை முன்வைத்த புதிய அரசியல் சக்திகளுக்கு ஆதரவு வழங்கினர். குறிப்பாக அரசியலமைப்புச் சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை தேர்தல் விவாதங்களின் மையமாக மாறின.

இந்நிலையில், இலங்கைக்கு வெறும் அரசியலமைப்புத் திருத்தங்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது. ஏனெனில், கடந்த காலத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எனவே, நாட்டிற்கு தேவையானது “சீர்திருத்த அரசியலமைப்பு” அல்ல மாறாக ஒரு “மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியலமைப்பு” ஆகும்.

அத்தகைய புதிய அரசியலமைப்பின் முதல் நோக்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதிகாரங்கள் ஒரே நபரிடம் குவியாமல், பல நிறுவனங்களுக்கிடையில் சமநிலையுடன் பகிரப்பட வேண்டும். இதன்மூலம் அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்.

அதேவேளை, நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எந்த அரசாங்கமும் அல்லது அரசியல் சக்தியும் சட்டத்திற்கு மேலானதாக இருக்க முடியாது என்பதைக் காட்டும் வகையில் அரசியலமைப்பின் மேலாதிக்கம் தெளிவாகப் பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களுக்கு அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படுவது ஜனநாயக பாதுகாப்பின் முக்கிய அங்கமாகும்.

புதிய அரசியலமைப்பு மனித உரிமைகள் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். கருத்துரிமை, மதச்சார்பற்ற சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி, பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் போன்றவை வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், நீதிமன்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமைகளாக இருக்க வேண்டும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை உருவாக்குவதிலும் புதிய அரசியலமைப்புக்கு முக்கிய பங்கு உள்ளது. அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் சலுகை அல்ல. அது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைத் தேவையாகும். மாகாணங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்குப் பொருத்தமான அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகளில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும்.

குறிப்பாக, இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் கருத்துக்களையும் பங்களிப்புகளையும் உள்ளடக்கியதாகவே புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டகால நிலைப்பாடாக இருந்து வருகின்றது. கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் போதுமான கலந்துரையாடல்கள் இன்றி உருவாக்கப்பட்டதாக பல அரசியல் ஆய்வாளர்களும் சமூக பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த அரசியலமைப்புகளின் பல அம்சங்கள் சிறுபான்மை மக்களிடையே அரசியல் அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தின. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட சூழலில், நாட்டில் இன முரண்பாடுகள் தீவிரமடைந்தன. பின்னர் சில தமிழ் இளைஞர் இயக்கங்கள் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணிகளில் இதுவும் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த வரலாற்றுப் படிப்பினைகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது அனைத்து இனங்களும், மதங்களும், பிராந்தியங்களும் பிரதிநிதித்துவம் பெறும் பரந்த ஆலோசனைச் செயல்முறை முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் பங்கேற்பு, அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு, சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகள் ஆகிய அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், புதிய அரசியலமைப்பொன்றை தமது ஆட்சிக்காலத்தில் கட்டாயம் கொண்டுவருவதாக தேர்தல் மேடைகளில் உறுதியளித்திருந்தது. நல்லாட்சி, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் மக்களின் அதிகாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந்த வாக்குறுதி முன்வைக்கப்பட்டது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இதுவரை தென்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியலமைப்பு உருவாக்கம் என்பது நீண்டகால ஆலோசனைகள், சட்ட வரைவுகள், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் மக்கள் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான செயல்முறையாகும். எனவே, இந்தப் பணியை தாமதமின்றி ஆரம்பிப்பது அவசியமாகியுள்ளது.

இலங்கையின் அரசியல் நடைமுறையைப் பொறுத்தவரை, ஒரு அரசாங்கம் தனது பதவிக் காலத்தின் மூன்றரை ஆண்டுகளை கடந்தவுடன் அடுத்த பொதுத் தேர்தலை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடையத் தொடங்குகின்றன. அதனால், ஆட்சியின் இறுதிக் காலத்தில் இத்தகைய முக்கியமான அரசியலமைப்பு மாற்றங்களை முன்னெடுப்பது மிகவும் கடினமாக மாறக்கூடும்.

மேலும், இலங்கையின் தேசிய அரசியலில் இன அரசியல் மற்றும் பேரினவாத சிந்தனைகள் இன்னமும் தாக்கத்தை செலுத்தும் சக்திகளாகவே உள்ளன. பல்வேறு அரசியல் முடிவுகள் தேர்தல் கணக்கீடுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் சூழலில், புதிய அரசியலமைப்புக்கான துணிச்சலானத் தீர்மானங்களை எடுப்பது காலப்போக்கில் மேலும் சிரமமாகலாம்.

எனவே, தற்போதைய அரசாங்கத்துக்கு நடைமுறையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயனுள்ள காலமாக எஞ்சியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அந்தக் காலப்பகுதிக்குள் அரசியலமைப்புத் தொடர்பான ஆலோசனைகள், வரைவுப் பணிகள் மற்றும் சட்ட நடைமுறைகள் அனைத்தும் இறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அனைத்து இன மக்களினதும் ஆதரவுடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கம் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றத் தவறியதாக மக்கள் மத்தியில் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதுவே அடுத்தத் தேர்தலில் அரசாங்கத்தின் மக்கள் ஆதரவில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தும் காரணியாகவும் அமையக்கூடும்.

இதேவேளை, எதிர்கால அரசியலமைப்பு ஒரு நிலையான சட்ட ஆவணமாக மட்டுமல்லாமல், காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய “வாழும் ஆவணமாக” அமைய வேண்டும். சமூக மாற்றங்கள், தொழிநுட்ப வளர்ச்சிகள், பொருளாதார சவால்கள் மற்றும் புதிய ஜனநாயக எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் திறன் அதற்கு இருக்க வேண்டும்.

இன்றைய இலங்கை ஒரு வரலாற்றுச் சந்திப்புப் புள்ளியில் நிற்கிறது. கடந்த காலத்தின் தோல்விகளையும் தவறுகளையும் மீண்டும் தொடர்வதா, அல்லது புதிய ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்ற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மக்கள் எழுச்சியும் தேர்தல் முடிவுகளும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ள செய்திதான் நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அனைத்தின மக்களினதும் பங்களிப்புடன் அவசியம் என்பது.

எனவே, மக்களின் இறையாண்மை உண்மையாக நிலைநிறுத்தப்படும், அதிகாரம் பொறுப்புக்கூறலுடன் செயல்படும், சமூக நீதி உறுதிப்படுத்தப்படும், அனைத்து இனங்களும் சம உரிமையுடன் வாழும் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை இந்த ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தையும் மக்கள் ஆட்சியையும் நேசிப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்.

The post புதிய அரசியலமைப்புக்கான  தேவை இலங்கையில் உள்ளதா? appeared first on Oruvan.com.

உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து – எமனாகும் வெப்பநிலை உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் சபை (United Nations) வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை மாற்ற தொர்பான அண்மைய அறிக்கை, உலகம் ஒரு முக்கியமான மற்றும் அபாயகரமான காலநிலை கட்டத்திற்குள் நுழைந்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

அறிக்கையின் படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக வெப்பநிலை இதுவரை பதிவான வரலாற்று அளவுகளை விட அதிகமாக உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, மனித நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டது எனக் கூறியுள்ள ஐ.நா., காலநிலை மாற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தை சமநிலைப்படுத்தும் இயற்கை அமைப்புகளின் திறனை விட காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலை மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது.

ஐ.நாவின் அறிக்கையின் பிரகாரம் உலக வெப்பநிலை தற்காலிகமாக 1.5°C வரம்பை மீறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (Paris Climate Agreement) இலக்குகளுக்கு நேரடி சவாலாகக் கருதப்படுகிறது.

கடுமையான வெப்ப அலைகள் அதிகரிக்கும் எனவும், குறிப்பாக நகர்ப்புறங்களில் வெப்பத் தாக்கம் (urban heat island effect) அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், கடல்மட்ட உயர்வு தொடர்ச்சியாக அதிகரிக்கும் நிலையில், குறைந்த உயரம் கொண்டத் தீவுகள் மற்றும் கடற்கரை நகரங்கள் பெரும் அபாயத்தை சந்திக்கும் எனவும் உணவு பாதுகாப்பு, நீர் வளங்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அழுத்தத்திற்கு உள்ளாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக வெப்பநிலை உயர்வின் அடிப்படை காரணிகள்

உலகளாவிய ரீதியில் வெப்பநிலை உயர்வின் பின்னணியில் பல மனிதச் செயல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முதலாவதாக, எரிசக்தி உற்பத்தியில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களின் அதிகப் பயன்பாடு வளிமண்டலத்தில் அதிக அளவிலான கார்பன் டைஆக்சைடை சேர்க்கிறது. இது பசுமை இல்ல விளைவை (greenhouse effect)  அதிகரிக்கிறது.

இரண்டாவதாக, உலகளாவிய தொழிற்துறை வளர்ச்சி, குறிப்பாக உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள், மிகப்பெரிய அளவில் கார்பன் வெளியீட்டை உருவாக்குகின்றன.

மூன்றாவதாக, காடுகள் அழிப்பு (deforestation) காரணமாக கார்பனை உறிஞ்சும் இயற்கை சமநிலை குறைகிறது. இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகமாக தங்குகிறது.

மேலும், வேகமான நகரமயமாக்கல், வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் அனைத்தும் இணைந்து இந்தப் பிரச்சினையை தீவிரப்படுத்துகின்றன.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை எந்தவொரு நாடும் முறையாக பின்பற்றுவதில்லை. முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய அமெரிக்காவே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டது.

விளைவுகளின் பல்முக தாக்கங்கள்

உலக வெப்பநிலை உயர்வு பனிமலை உருகுதல் வேகத்தை அதிகரிக்கிறது. இதன் நேரடி விளைவாக கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் மெதுவாக நீரில் மூழ்கும் அபாயம் உருவாகிறது.

அதேபோல், உயிரினங்களின் வாழிடங்கள் அழிந்துடன், தற்போதைய சூழவில் பல இனங்கள் அழிவின் ஆபத்தில் உள்ளன. கடல் சூழல் அமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

பொருளாதார தாக்கங்கள்

விவசாயம் இந்த மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் துறையாகும். பருவமழை மாற்றம் காரணமாக உணவு உற்பத்தி குறையும், இதனால் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் என்பதுடன், கடுமையான உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும்.

அத்துடன், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் அரசுகளுக்குப் பெரும் நிதிச் சுமையை உருவாக்கும். காப்பீட்டு துறை மற்றும் கட்டமைப்புத் துறைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன.

சமூக தாக்கங்கள்

வெப்பநிலை அதிகரிப்பால் மனித வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். குடிநீர் பற்றாக்குறை, வெப்ப அலை காரணமாக உயிரிழப்பு அபாயம், மற்றும் புதிய நோய்கள் பரவல் அதிகரிக்கக்கூடும். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் இடம்பெயர்வு (climate migration) அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

பிராந்திய ரீதியான உலக விளைவுகள்

உலகின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கப்படுகின்றன. ஐரோப்பா கடுமையான வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ சம்பவங்களை எதிர்கொள்கிறது. வட அமெரிக்கா சூறாவளி மற்றும் புயல் தாக்கங்களை அதிகமாக சந்திக்கிறது. ஆப்பிரிக்கா கடுமையான வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

லத்தீன் அமெரிக்காவில் காடுகள் அழிவு மற்றும் உயிரியல் பல்வகைமை குறைவு அதிகரிக்கிறது. ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் வெள்ளம், சூறாவளி மற்றும் மக்கள் இடம்பெயர்வு போன்ற சிக்கல்களை அதிகமாக எதிர்கொள்கின்றன.

தீர்வுகள் மற்றும் சர்வதேச கொள்கை நடவடிக்கைகள்

இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த பலத் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முதன்மையாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) பயன்பாட்டை உலகளவில் விரிவுபடுத்த வேண்டும். சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் முக்கிய மாற்று வழிகளாக கருதப்படுகின்றன.

கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த கடுமையானச் சட்டங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் தேவைப்படுகிறது. UNFCCC மற்றும் IPCC போன்ற அமைப்புகள் இதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. காடுகள் பாதுகாப்பு மற்றும் மீண்டும் காடு வளர்ப்பு (reforestation) நடவடிக்கைகள் மிக முக்கியமானதாகும்.

பாரிஸ் பருவளை ஒப்பந்தத்தில் இந்த விடயங்கள்தான் அதிகமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. என்றாலும், அந்நிய முதலீடுகள் மற்றும் வர்த்தகம், தொழில் வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் முட்டுக்கட்டையாக அமைவதாக பல நாடுகள் அதில் இருந்து வெளியேறியுள்ளன.

பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரகாரம் எந்தவொரு நாடும் செயல்படவில்லை என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிருந்தார்.

என்றாலும், பல ஐரோப்பிய நாடுகள் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் பிரகாரம் இன்னமும் தமது செயல்பாடுகளை முன்னெடுப்பதுடன், தமது இலக்குகள் குறித்தும் அறிவிப்புகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன.

தெற்காசிய நாடுகள் உலகளவில் காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும்.

இந்தியாவில், வெப்ப அலைகள் அதிகரித்து மனித உயிரிழப்பு அபாயம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. பருவமழை மாறுபாடு இந்தியாவில் விவசாய உற்பத்தியை நேரடியாக பாதிப்பதுடன்,  நகரங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மின்சார தொடர்பானப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

இலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகள் அதிக அபாயத்தில் உள்ளன. தேயிலை உற்பத்தி மற்றும் விவசாயம் வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மண்சரிவு, வெள்ளம் உட்பட பல இயற்கை அனர்த்தங்கள் மலையகப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன. கடல் மட்ட உயர்வு காரணமாக கடற்கரை சமூகங்கள் இடம்பெயர வேண்டிய நிலை உருவாகலாம் என இலங்கை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றமானது இந்தியா மற்றும் இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக நிலைத்தன்மைக்கும் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

எனவே, ஐ.நா. வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, உலகம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. காலநிலை மாற்றம் இனி எதிர்கால அபாயமல்ல  அது தற்போதைய நிஜம்.

காலநிலை மாற்றம் தொடர்பில் உலக நாடுகள் உடனடி, ஒருங்கிணைந்த மற்றும் அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் உலகம் வரலாற்றில் இல்லாத அளவிலான காலநிலை நெருக்கடியை சந்திக்கும் அபாயம் உள்ளது.

சு.நிசாந்தன்

The post உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து – எமனாகும் வெப்பநிலை  உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை  appeared first on Oruvan.com.

“மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு”
மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிபொருள் சந்தையில் கடும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய இராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 புள்ளி 75 சதவீதம் அதிகரித்து, 97 புள்ளி 8 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை பகுதியைச் சுற்றி பதற்றம் அதிகரித்துள்ளதால், உலக சந்தைகளில் எரிபொருள் விநியோக தடைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

இந்த பதற்ற நிலைமை நீடித்தால், உலகளவில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே, அமெரிக்காவும் ஈரானும் அண்மையில் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகி வந்த நிலையில், இரு தரப்புகளுக்கும் இடையே மீண்டும் மோதல் சூழல் உருவாகியுள்ளது.

பந்தர் அப்பாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

எந்த நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்கள் குறிவைக்கப்பட்டன என்பது தெளிவாக வெளியிடப்படாதபோதிலும், ஈரானால் ஏவப்பட்ட சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தங்களது பாதுகாப்புப் படைகள் முறியடித்ததாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பு நிலையை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக பங்குச் சந்தைகளிலும் இந்த பதற்றத்தின் தாக்கம் பிரதிபலித்துள்ளது. பல நாடுகளில் விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் ஆற்றல் துறைகளில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கு பதற்றம் மேலும் தீவிரமடையாமல் இருக்க உடனடி இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையும் பல உலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

The post “மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு” appeared first on Oruvan.com.

பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது
உலகில் இன்னும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் பழைமையான ஆட்சிமுறைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது பிரித்தானிய முடியாட்சியாகும். இன்று மூன்றாம் சார்ள்ஸ் (Charles III) தலைமையில் இயங்கும் இந்த முடியாட்சி, வெறும் ஓர் அரச குடும்பத்தின் வரலாறு மட்டுமல்ல. அது இங்கிலாந்தின் அரசியல், சட்டம், பேரரசு, மதம் மற்றும் ஜனநாயக வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்புடையதாகும்.

பிரித்தானிய முடியாட்சி உண்மையில் எப்போது ஆரம்பமானது?

பண்டைய காலம் தொட்டு பிரித்தானிய முடியாட்சி பல கட்டங்களாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இன்றைய ஒன்றுபட்ட பிரித்தானியா உருவாகும் முன்பு பிரிட்டிஷ் தீவுகள் பல சிறிய இராச்சியங்களாகப் பிரிந்திருந்தன.

Wessex, Mercia, Northumbria, East Anglia போன்ற இராச்சியங்கள் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக வலுவானவையாக இருந்தன. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் Viking படையெடுப்புகள் தீவிரமடைந்தபோது, இந்தச் சிறிய இராச்சியங்கள் உயிர்வாழ்வதற்காக ஒன்றிணைய வேண்டிய சூழல் உருவானது.

9ஆம் நூற்றாண்டில் Viking படையெடுப்புகள் அதிகரித்தபோது, Wessex இராச்சியத்தின் மன்னராக இருந்த Alfred the Great மிக முக்கியமான தலைவராக உருவெடுத்தார்.

Viking படைகளுக்கு எதிராக போராடிய அவர், ஆங்கிலப் பகுதிகளை ஒன்றிணைக்கத் தொடங்கினார். அதற்காக “King of the Anglo-Saxons” என்ற அடையாளத்தை அவர் உருவாக்கினார் என பிரித்தானிய வரலாறு தெரிவிக்கிறது.

Æthelstan என்பவரே “முழுமையான இங்கிலாந்தின் முதல் மன்னர்” என்று வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 927ஆம் ஆண்டில் பல Anglo-Saxon பகுதிகளை ஒருங்கிணைத்து மைய ஆட்சியை உருவாக்கியதால், இங்கிலாந்து முடியாட்சியின் ஆரம்பம் அங்கிருந்தே தொடங்குகிறது என கருதப்படுகிறது.

இதனால் “பிரித்தானிய முடியாட்சி 1000 ஆண்டுகளுக்கும் மேலானது” என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், பிரித்தானிய முடியாட்சி வரலாற்றில் 1066 மிக முக்கியமான ஆண்டாகும்.

முடியாட்சிக்கான முதல் முக்கிய படியாக அமைந்தது

இந்த ஆண்டில் William the Conqueror நோர்மண்டியிலிருந்து இங்கிலாந்தை கைப்பற்றினார். இது “Norman Conquest” என அழைக்கப்படுகிறது. இந்த வெற்றிக்குப் பின்னர் மன்னராட்சி மிகவும் மையப்படுத்தப்பட்டதுடன், நில அமைப்பும் (feudal system) மாற்றப்பட்டது. பிரெஞ்சுக் கலாசாரம் மற்றும் மொழி ஆகியன அரசவையில் ஆதிக்கம் செலுத்தியதுடன், ஆட்சித் திட்டமும் நவீனமயமாகியது.

இன்றைய பிரித்தானிய அரச குடும்பத்தின் அரசியல் அமைப்பு பல வகையில் 1066 க்குப் பிந்தைய காலத்திலிருந்தே உருவாகத் தொடங்கியது என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1215ஆம் ஆண்டு மன்னர் ஜோன் (King John) மக்னா கார்ட்டா (Magna Carta) என்ற முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இது மன்னரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியதுடன், சட்டத்தின் மேலாதிக்கத்தை உருவாக்கியது. அத்துடன், பாராளுமன்ற வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது. இதுவே பின்னர் அரசியலமைப்பு முடியாட்சிக்கான முதல் முக்கிய படியாகவும் அமைந்தது.

தனிமனித சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிய நவீன ஜனநாயகத்தின் அடிப்படை மைல்கல்லாக மக்னா கார்ட்டா ஒப்பந்தம் கருதப்படுகிறது.

17ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகள் ஏற்பட்டிருந்தன. முதலாம் சார்ள்ஸ் மன்னர் (Charles I) மற்றும் பாராளுமன்றத்திற்கிடையிலான மோதல் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது.

இதன் எதிரொலியாக 1649ஆம் ஆண்டு முதலாம் சார்ள்ஸ் மன்னருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், முடியாட்சியும் தற்காலிகமாக நீக்கப்பட்டு ஓலிவர் க்ரோம்வெல் (Oliver Cromwell) தலைமையில் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டமை பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றமாகும். என்றாலும், 1660ஆம் ஆண்டு முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டது.

அதன்பின் மன்னரின் அதிகாரம் குறைக்கப்பட்டதுடன், பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டு அரசியலமைப்பு ரீதியாக முடியாட்சி உருவாகத் தொடங்கியது. 1688ஆம் ஆண்டு நடந்த “Glorious Revolution” மற்றும் 1689 Bill of Rights (உரிமைகள் சட்டமூலம்) மூலம் மன்னர் முழுமையான அதிகாரம் கொண்ட ஆட்சியாளர் அல்ல, என்பது சட்ட ரீதியாக உறுதிசெய்யப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகால அரசியல் பரிணாமத்தின் விளைவாகும்

தனி இராச்சியங்களாக இருந்த இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் 1707 இல் Acts of Union (ஒன்றியச் சட்டங்கள்) மூலம் இணைக்கப்பட்டு Kingdom of Great Britain (பெரிய பிரிட்டன் இராச்சியம்) உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் “British Monarchy” (பிரிட்டிஷ் முடியாட்சி) என்ற அதிகாரப்பூர்வ அடையாளம் உருவானது. இதன் முதல் அரசியாக Anne (ஆன்) தெரிவானார். 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் பேரரசு (British Empire) உலகின் மிகப்பெரிய பேரரசாக வளர்ந்தது.

விக்டோரியா மகாராணியின் (Queen Victoria) ஆட்சிக்காலத்தில் இந்தியா, ஆபிரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா உட்பட உலகின் பல பகுதிகளில் பிரித்தானியப் பேரரசின் ஆட்சி விரிவடைந்தது.

பின்னர் காலனித்துவத்துக்கு எதிராக உலகம் முழுவதும் எழுச்சியடைந்த சுதந்திரப் போராட்டங்கள் காரணமாக கொலனித்துவத்திலிருந்த பல நாடுகள் சுயாட்சி நாடுகளாக உருவாகின.

இன்றுள்ள பிரித்தானிய முடியாட்சி மிகவும் அடையாளப்பூர்வமானது மட்டுமே!. பாராளுமன்ற ஜனநாயகத்துடன் இணைந்ததுடன், அரசியலமைப்பின் கீழ் இயங்கி வருகிறது. அரசாங்கமே நடைமுறை அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மன்னராட்சி வெறும் சம்பிரதாயத்துக்காகவே பாதுகாக்கப்படுகிறது. என்றாலும், பிரித்தானியாவில் மன்னர்களுக்கு மிகப் பெரிய கௌரவம் இன்றும் உள்ளது.

பிரித்தானிய முடியாட்சி ஒரே நாளில் உருவான அமைப்பு அல்ல. அது Anglo-Saxon இராச்சியங்களிலிருந்து, Norman ஆட்சியிலிருந்து, பாராளுமன்றப் போராட்டங்களிலிருந்து, பேரரசு விரிவாக்கங்களிலிருந்து மெல்ல மெல்ல உருவான ஆயிரம் ஆண்டுகால அரசியல் பரிணாமத்தின் விளைவாகும்.

சில வரலாற்றாசிரியர்கள் கி.பி. 927ஆம் ஆண்டை அதன் தொடக்கமாகக் குறிப்பிடுகின்றனர். மற்றவர்கள் 1066 Norman Conquest-ஐ முக்கிய திருப்புமுனையாகக் கருதுகின்றனர். என்றாலும், அதிகாரப்பூர்வ “British Monarchy” (பிரித்தானிய பேரரசு) 1707ஆம் ஆண்டு தான் உருவானது என்பதே வரலாற்று உண்மையாகும்.

சு.நிசாந்தன்

The post பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது appeared first on Oruvan.com.

இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையைச் சூழவுள்ள பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தாழ் அமுக்க மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடிப்பதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தினம் (14) மேற்கொள்ளப்பட்ட வானிலை பகுப்பாய்வுகளின்படி, நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பரப்புகளிலும், வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பரப்புகளிலும் பலத்த காற்றுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக பொதுமக்கள், குறிப்பாகக் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு appeared first on Oruvan.com.

வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்’: ஜனாதிபதி கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்
வட​கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடு​கள் மீது தானாகவே அணு ஆயுத தாக்​குதல் நடத்​தப்​படும் என்று அந்த நாடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இது வடகொரி​யா​வின் ‘டெட் ஹேண்ட்’ என்​றழைக்​கப்​படு​கிறது.

கடந்த 1980-களில் சோவி​யத் யூனியன் (ரஷ்​யா) ‘டெட் ஹேண்ட்’ என்ற அணு ஆயுத கட்​டளை அமைப்பை உரு​வாக்​கியது.

எதிரி நாடுகளின் அணு ஆயுத தாக்​குதலால் ரஷ்யா அழிந்​து, அதன் தலை​வர்​கள் உயி​ரிழந்​தால் ‘டெட் ஹேண்ட்’ தானாக செயல்​பட்டு எதிரி நாடு​கள் மீது அணு ஆயுத தாக்​குதல்​களை நடத்​தும்.

இந்த ‘டெட் ஹேண்ட்’ அணு ஆயுத கட்​டளை அமைப்பை தற்​போதைய ரஷ்ய அரசு நவீன தொழில்​நுட்​பத்​துடன் புதுப்​பித்து வைத்​திருக்​கிறது. இதே பாணி​யில் வடகொரி​யா​வும் ‘டெட் ஹேண்ட்’ அமைப்பை உரு​வாக்கி உள்​ளது.

இதுகுறித்து சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது:

வடகொரி​யா​வின் அரசமைப்​புச் சட்​டத்​தில் திருத்​தங்​கள் செய்​யப்​பட்டுள்​ளன. இதன்​படி பாது​காப்பு சார்ந்த சட்​டங்​களி​லும் பல்​வேறு திருத்​தங்​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. குறிப்​பாக ரஷ்​யாவை பின்​பற்றி வடகொரி​யாவிலும் ‘டெட் ஹேண்ட்’ அணு ஆயுத கட்​டளை அமைப்பு உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது.

எதிரி நாடு​களின் தாக்​குதலில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால் ‘டெட் ஹேண்ட்’ அமைப்பு தானாக செயல்​பட்டு, எதிரி நாடு​களின் மீது அணு ஆயுத தாக்​குதல்​கள் நடத்​தப்​படும்.

அமெரிக்​கா, ஈரான் போர், வெனிசூலா ஜனாதிபதி நிக்​கோலஸ் மதுரோ சிறைபிடிக்​கப்​பட்​டது ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டு ‘டெட் ஹேண்ட்’ அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டிருப்​ப​தாக வடகொரியா விளக்​கம் அளித்​திருக்​கிறது. இது மிக​வும் ஆபத்தானது.

ஒரு​வேளை ஜனாதிபதி கிம் ஜாங் உன்​னின் உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டால் ‘டெட் ஹேண்ட்’ அமைப்​பால் தென்​கொரி​யா​வுக்கு மிகப்​பெரிய அளவில் பாதிப்பு ஏற்​படும். வடகொரி​யா​வின் அணு ஆயுதங்​களை சுமந்து செல்​லும் ஹ்வா​சாங் ரக ஏவு​கணை​கள் சுமார் 15,000 கிமீ. தொலைவு சீறிப் பாயக்​கூடியவை என்று கூறப்​படு​கிறது. இதனால் வெகுதொலை​வில் உள்ள அமெரிக்​கா​வின் பாது​காப்​புக்​கும் அச்​சுறுத்​தல் ஏற்​படும். இவ்​வாறு சர்​வ​தேச பாது​காப்​பு நிபுணர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

The post வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்’: ஜனாதிபதி கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல் appeared first on Oruvan.com.

இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு
இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தூதுவரின் விசேட அழைப்பின் பேரில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தூதுவரின் உத்தியோகபூர்வ வதிவிடத்திற்கு விஜயம் செய்தார்.

இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அமைச்சர் ஜப்பான் தூதுவருடன் இராப்போசனத்திலும் கலந்துகொண்டார்.

கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் இந்தச் சந்திப்பின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் திட்டங்கள் மற்றும் அவற்றை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.

கடற்றொழில் அமைச்சின் எதிர்கால இலக்குகள் மற்றும் இலங்கையின் கடல் வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சர் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.

கடற்றொழில் துறையில் ஜப்பான் பெற்றுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஜப்பான் தூதுவரின் உறுதிமொழி அமைச்சரின் விளக்கங்களைக் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர், இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவதற்கும், புதிய புத்தாக்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும் ஜப்பான் அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதற்கான முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்போது, அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித்த கமல் ஜினதாச, அமைச்சரின் பிரத்யேக செயலாளர் ஸ்ரீதரன் பூலோகராஜா, அமைச்சரின் இணைப்பு செயலாளர் கேசன் மதுசங்க ஆகியோரும் உடனிருந்தனர்.

The post இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு appeared first on Oruvan.com.

“தைவானால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” – ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி எச்சரிக்கை
சீனா – அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விடயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் அவரை, சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங் வரவேற்றார்.

இதையடுத்து, ஜி ஜின்பிங்கை, டொனால்ட் ட்ரம்ப் இன்று சந்தித்தார்.

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜி ஜின்பிங் தெரிவித்த கருத்துக்கள் குறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், “டொனால்ட் ட்ரம்ப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தைவான் ஜலசந்தியில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பதே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மிகப் பெரிய பொதுவான காரணியாகும் என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

சீன – அமெரிக்க உறவுகளில் தைவான் பிரச்சினை மிக முக்கியமான விடயம் என்று குறிப்பிட்ட ஜி ஜின்பிங், அது சரியாகக் கையாளப்பட்டால் இரு தரப்பு உறவு ஸ்திரத்தன்மையை அனுபவிக்கும் என அவர் கூறினார்.

இல்லாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்றும் ஜி ஜின்பிங் கூறினார். மேலும், தைவான் சுதந்திரமும் தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

சீன – அமெரிக்க பொருளாதார உறவுகள் பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடியவை இரு தரப்புக்கும் வெற்றியைத் தரக்கூடியவை எனத் தெரிவித்த ஜி ஜின் பிங், இரு நாட்டு வர்த்தக குழுக்களிடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தில், சமநிலையான, சாதகமான முடிவுகள் எட்டப்பட்டிருப்பது இரு நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் நல்ல செய்தி என கூறினார்.

வர்த்தக போர்களில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதை கடந்த கால சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன என தெரிவித்த ஜின்பிங், கருத்து வேறுபாடுகளும் உராய்வுகளும் இருக்கும் இடங்களில் சமமான ஆலோசனை மட்டுமே சரியான தேர்வாக இருக்கும் என்றார்.

நாம் கடினமாக உழைத்து உருவாக்கியுள்ள இந்த நல்ல உறவை; உத்வேகத்தை இரு தரப்பினரும் கூட்டாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “தைவானால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” – ட்ரம்ப்பிடம் சீன ஜனாதிபதி எச்சரிக்கை appeared first on Oruvan.com.

எரிபொருள் விலை 720 ரூபா – ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு
எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, நாட்டில் ஒரு லீற்றர் டீசல் விலை 720 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், அரசாங்கம் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் செலவிட்டு, 392 ரூபாய் என்ற விலையில் மக்களுக்கு வழங்கி வருவதால் எரிபொருள் கூட்டுத்தாபனம் நட்டத்தைச் சந்தித்து வருவதாகவும், இதனை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 98 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது. மார்ச் மாதத்தில் 216 மில்லியன் டொலர்களும், ஏப்ரல் மாதத்தில் 368 மில்லியன் டொலர்களும் செலவாகியுள்ளன. மே மாதத்தில் 522 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 6 மடங்குக்கும் அதிகமான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாம் ஒரு சவாலுடன் தான் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டியுள்ளது.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை சுமார் 720 ரூபாய் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது. ஆனால் நாம் 392 ரூபாய்க்கு வழங்குகிறோம். அரசாங்கம் 100 ரூபாய் சுமையை ஏற்கிறது. அப்போது கூட்டுத்தாபனத்திற்கு 492 ரூபாய் கிடைக்கிறது. அங்கேயும் அவர்களுக்குப் பெரிய நட்டம் உள்ளது. அந்த நட்டத்தை ஈடுசெய்ய வேண்டும். கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற நிர்வாகத்தால் ஏற்பட்ட 84 பில்லியன் ரூபாய் நட்டத்தை அரசாங்கமே ஏற்றுள்ளது.

மின்சாரக் கட்டணமும் அப்படித்தான். எரிபொருள் விலை அதிகரிப்பால் இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கும் நாம் ஒரு நிவாரணத்தை வழங்குவோம். மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்கப்பட்ட போது, 95% மக்களுக்கு அந்த அதிகரிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 5% மானவர்களுக்கு மாத்திரமே கட்டணம் அதிகரித்தது.

ஆனால் திறைசேரியிலிருந்து தொடர்ச்சியாகப் பணம் வழங்கி எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையைப் பராமரிக்க முடியாது. அவற்றை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும்.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் இலக்கு எமக்கு உள்ளது. அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் போது, பழைய முறையிலேயே பயன்பாடு இருந்தால் டொலர்கள் வெளியேறுவது அதிகரிக்கும். எனவே தான் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். எரிபொருள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க முயற்சிப்போம்.” எனத் தெரிவித்தார்.

The post எரிபொருள் விலை 720 ரூபா – ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு appeared first on Oruvan.com.

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ வெற்றி
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள். எதிர்க்கட்சியான திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார்.

இதனையடுத்து, பேரவை 99 உள்விதி 5இன் கீழ் எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களை 6 பகுதிகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு பகுதிகளாக ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிட்டு சபாநாயகர் அழைத்தார். இதில் முதலில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக எதிர்ப்பு தெரிவிப்போர், நடுநிலை வகிப்போர் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் நம்பிக்கை தீர்மானத்துக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்த தீர்மானத்தில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி ஆதரித்தது. வேலுமணி தரப்பில் ஹரி, எஸ்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இசக்கி சுப்பையா, இரா.காமராஜ், சத்தியபாமா, லீமா ரோஜ், மரகதம் குமரவேல்,சுகுமார், சேகர், திலீபன் ஜெய்சங்கர், நட்ராஜ், நத்தம் விஸ்வநாதன், க.மோகன், ரவி மனோகரன், ராகேஷ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஜெயக்குமார், அருள்மொழித் தேவன், சி.வி.சண்முகம், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், இ.சி.கோவிந்தராஜன், சு.பழனிசாமி, ராமச்சந்திரன், உஷாராணி, ஜெயசுதா, சம்பத் குமார், தளவாய் சுந்தரம், நல்லதம்பி, ராஜசேகர், ராஜேந்திரன், கோ.வெங்கடாசலம், வெற்றிவேல், வேலழகன், ஜெயசங்கரன் உள்ளிட்டோர் தீர்மானத்தை எதிர்த்தனர். பாமக, பாஜக இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது.

இதன் அடிப்படையில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது என்ன?- புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்புக்காக சட்டப்​பேர​வை இன்று (13) காலை 9.30 மணியளவில் கூடியது.

அவை கூடியதும், தமிழக முதல்வர் விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது வாக்கெடுப்பு நடப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். அதன்பின்னர், பேரவையில் விவாதம் தொடங்கியது.

தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் – கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் தவெக அரசுக்கு ஆதரவை அறிவித்தார். அவர் பேசுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மதச்சார்பற்ற கட்சிகளிடம் மட்டுமே விஜய் ஆதரவு கோரினார்.

அந்த வகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் என்ற மதச்சார்பற்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.

பெரிய கனவுகளுடன் தமிழகத்தில் காலூன்ற விரும்பிய பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. எங்களின் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி தவெக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்,” என்றார்.

தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி எம்எல்ஏ செல்லசாமி பேசுகையில், “தவெக-வை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவை சிபிஎம் ஆதரிக்கிறது. இந்த அரசு மதச்சார்பின்மை, கூட்டாட்சி, தமிழக சட்டமன்றத்தின் மான்புகளை உயர்த்திப் பிடிக்க வேண்டி இந்த அரசுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறேன்,” என்றார்.

விசிக எம்எல்ஏ வன்னியரசு பேசுகையில், “தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று 5 ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தும் என நான் நம்புகிறேன். முன்கூட்டியே அதற்கு வாழ்த்துகிறேன். பாஜகவின் செயல்திட்டமான ஆளுநர் ஆட்சியைத் தடுக்கும் வகையில் தவெகவுக்கு விசிக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தவெக அரசு தொகுதி மறுவரையறைக்கு எதிராக செயல்பட வேண்டும், தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோருகிறோம். மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற முந்தைய நலத் திட்டங்கள் தொடர வேண்டும்” என்றார்.

ஐயூஎம்எல்ஏ எம்எல்ஏ ஷாஜஹான் பேசுகையில், “மக்களின் மௌனப் புரட்சி இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்தியது ஒரு வரலாற்று ஆச்சர்யம் தான். வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக் கூடங்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் மூடலை வரவேற்கிறோம். மதச்சார்பின்மையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்த அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். முதல்வர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்தது வாழ்த்துகளுக்கு உரியது” என்றார்.

அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசுகையில், “முதல்வர் விஜய்யை ஆளுமை மிக்கவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர். அதனாலேயே திருச்சியில் 400 ரவுடிகள் சரணடைந்துள்ளனர். தவெகவுக்கு நேற்றும், இன்றும், நாளையும் எனது ஆதரவு உண்டு,” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் பேசுகையில், ”குடியரசுத் தலைவர் ஆட்சி மூலம் பாஜக கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சி செலுத்திவிடக் கூடாது என்பதற்காக ஆதரவு அளித்துள்ளோம். ஒன்றிய அரசு மாநில உரிமை, சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது. அதற்கு எதிராக முதல்வர் விஜய் துணிவோடு செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்றார்.

பிரேமலதா கண்டனம்:

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசுகையில், “எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து ஒரு மாண்பை கடைப்பிடித்துள்ளீர்கள். அதற்கு வாழ்த்துகள். முதலில் 717 மதுக்கடைகளை மூடியது வரவேற்கத்தக்கது.

அதேவேளையில், இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெறாத குதிரை பேரம் நடந்ததாக வரும் தகவல்களால் நான் மனவேதனை அடைகிறேன். ஜோதிடர் ராதன் பண்டிட்டை அரசு அதிகாரியாக நியமித்ததை தமிழக மக்கள் சார்பாக கண்டிக்கிறேன். இதன்மூலம் தமிழக இளைஞர்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள் என்பதை நீங்கள் (விஜய்) தெளிவுபடுத்த வேண்டும். இந்த அரசு இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன்.” என்றார்.

இன்று ஒற்றைத் தாமரைதான்…

பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேசுகையில், “நம்பிக்கை தீர்மானத்தில் எம் எல் ஏக்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு பாஜகவுக்கு எதிரான பிரச்சாரம் போல் பேசிவிட்டார்கள். நான் ஒற்றைத் தாமரை என்றார்கள். நாடாளுமன்றத்தில் 2 பாஜக உறுப்பினர்கள் மட்டுமே ஒரு காலத்தில் இருந்தனர். இன்று மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது,” என்றார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக நடுநிலை காத்தது.

வாக்கெடுப்பில் விலகி நின்ற பாமக:

பாமக எம் எல் ஏ சவுமியா அன்புமணி பேசுகையில், “சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் என்பதே பாமகவின் கொள்கை. போதையில்லா தமிழ்நாடு என்பது பாமகவின் நிலைப்பாடு. பாமக கொள்கைகள் தமிழக நலனை முன்னிறுத்துவது ஆகும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க வேண்டும். விகித்தாச்சார பிரதிநித்துவத்தை ஏற்படுத்த வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் 80% தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டம் இயற்றுதல் உள்ளிட்டவை பாமகவின் நோக்கங்கள். தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாமக கொள்கைகளை ஒத்துப்போகும் வாக்குறுதிகள் இருந்தன. தமிழக முன்னேற்றத்திலும், நலனிலும் அக்கறை கொண்டு பாமக வாக்களிப்பதிலிருந்து விலகி நிற்கிறது,” என்றார். பாமகவுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

தவெக அரசுக்கு அதிமுக ஆதரவில்லை: இபிஎஸ்

இபிஎஸ் – தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை எதிர்ப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி 47 பேர் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்றுள்ளனர். தவெக அரசுக்கு 65% வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

அதிமுக அரசின் ஆட்சி காலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தது. அரசுப் பள்ளியில் கல்வி கற்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்க நீட் தேர்வை எதிர்கொள்ள 7.5 % உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது. மேலும், அவர்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அவர்களுக்கான கல்விச் செலவுகளையும் அரசு ஏற்றது.

அதிமுகவில் 47 சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்எல்ஏக்கள் ஆகியுள்ளனர், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி ஆளுங்கட்சியினர் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிப்பதாக தகவல் கிடைக்கிறது. இதனை தூய சக்தி என்று தன்னை கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய் ஏற்கக் கூடாது,” என்று பழனிசாமி கூறினார்.

திமுக வெளிநடப்பு:

நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது. சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கண்டித்தார். மேலும், திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டங்கள் தொடர வேண்டும் என்றார்.

முன்னதாக, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழகம் ​(தவெக) 108 தொகு​தி​களில் வெற்​றி பெற்​றது. தனிப் பெரும்பான்​மைக்கு தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​காத​தால் காங்கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய திமுக கூட்டணி கட்​சிகளிடம் விஜய் ஆதரவு கோரி​னார். அதில் 5 எம்எல்ஏக்​களை கொண்ட காங்​கிரஸ், திமுக கூட்​ட​ணியை முறித்து கொண்டு தவெக​வுக்கு ஆதரவு அளித்​தது.

மேலும் தவெக​வுக்கு நிபந்​தனையற்ற ஆதரவு அளிப்​ப​தாக தலா 2 எம்​எல்​ஏக்​களை கொண்ட இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக் ஆகிய கட்​சிகள் அறிவித்தன. இதன்​மூலம் தவெக​வின் பலம் 120-ஆக உயர்ந்​தது. ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை எண்​ணிக்கை கிடைத்​த​தால் கடந்த 10-ம் திகதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவியேற்றார். 9 அமைச்​சர்​களும் பதவி ஏற்​றனர்.

அதைத் தொடர்ந்து சட்​டப்​பேரவை தற்​காலிக தலை​வ​ராக கருப்பையா நியமிக்​கப்​பட்​டார். பின்​னர் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டத்​தொடரில் முதல்வர் விஜய், அமைச்​சர்​கள் உட்பட 233 எம்​எல்​ஏக்​கள் பதவியேற்​றுக் கொண்​டனர்.

இந்​நிலை​யில், புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு தனது பெரும்​பான்​மையை சட்​டப்​பேர​வை​யில் மே 13-ம் திகதிக்குள் ​(இன்று) நிரூபிக்க வேண்​டும் என்று ஆளுநர் அர்​லேகர் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்தார்.

அதன்​படி தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிக்​கும் தீர்​மானம் சட்​டப்​பேர​வை​யில் இன்று கொண்டு வரப்​பட்டு வாக்​கெடுப்பு நடை​பெற்றது. இதில் தவெக அரசு பெரும்பான்மையை நிறைவேற்றியது.

The post நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ வெற்றி appeared first on Oruvan.com.