ஏஐ அம்மா…டெக்னோலஜியின் அடுத்தகட்ட நகர்வு

ஏஐ அம்மா…டெக்னோலஜியின் அடுத்தகட்ட நகர்வு

உலகளாவிய ரீதியில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துவிட்டது.

அந்த வகையில் இளம் தாய்மார்களின் எண்ணவோட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவில் காவியா என்ற முதல் ஏஐ அம்மா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஏஐ அம்மா, தொழில், குடும்பம் என இரண்டையும் ஒரே நேரத்தில் அழகாய் சமாளிக்கும் நவீன தாயை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தில் பெண்களின் கஷ்டங்கள், குழந்தை வளர்ப்பில் உள்ள சிக்கல்கள் மேலும் விதவிதமான உணவுகளை சமைத்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறது இந்த ஏஐ அம்மா.

Share This